Tuesday, September 7

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு



  • டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ல் செப்டம்பர் 5ஆம் தேதி தமிழ்நாட்டில் திருத்தணியில் இருக்கும் சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
  • சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.
  • 1923 இல் இவரின் அற்புதப் படைப்பான "இந்திய தத்துவம்"  என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  • 1933 முதல் 1937 வரை ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
  • 1946-UNESCO-வின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
  • 1948-49 அவர் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1948 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை ஆராய டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி குழு அன்றைய பிரதமர்  நேருவால் அமைக்கப்பட்டது.
    • இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும் ராதாகிருஷ்ணன் கல்வி குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
  • 1952 - சுதந்திர இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
  • 1954- இந்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது  வழங்கப்பட்டது.
  • 1961- இவருக்கு ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசு (The Peace Prize of German Book Trade) வழங்கப்பட்டது.
  • 1962 முதல் 1967 வரை குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராவார்.
  • 1962 முதல் இவர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • 1997ம் ஆண்டு முதல் தமிழக அரசு, நல்லாசிரியர் விருதை "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" என்ற பெயரில் வழங்கி வருகிறது.
  •  உலக ஆசிரியர் தினம் -  அக்டோபர் 5.
  • சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகங்கள் 
    1. முதன்மை உபநிடதங்கள்
    2. இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
    3. இந்தியத் தத்துவம் தொகுதி I & II
    4. கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
    5. தம்மபதம்
    6. பகவத் கீதை விளக்க உரை
    7. கிழக்கும் மேற்கும்
    8. மகாத்மா காந்தி
    9. கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
    10. பிரம்ம சூத்திரம் விளக்க உரை
    11. இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
    12. இந்திய சமயங்களின் சிந்தனை
    13. இந்துஸ்தானின் இதயம் 
    14. சமயமும் கலாச்சாரமும்
    15. சமகால இந்திய தத்துவம்
    16. சமயமும் சமுதாயமும்
    17. உண்மையான கல்வி
    18. இந்தியச் சமயங்கள் 

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...