கொல்லாமை - தமிழின் குறிக்கோள்
பொய்யாமை - தமிழின் கொள்கை
தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் - நாமக்கல் கவிஞர்
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தைப் பின்பற்றியதால் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர்
தமிழகத்தின் முதல் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர் எழுதியுள்ள நூல்கள் - மலைக்கள்ளன் என்கதை சங்கொலி மற்றும் நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன
நெறி எனும் சொல்லின் பொருள் - வழி
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் - ஒழுக்கம்
மொழிக்குரிய ஒழுங்கு முறைகள் - மரபு
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி செய்திகளைக் கூறும் நூல் - தொல்காப்பியம்
மயக்கம் என்பதின் பொருள் - கலவை
மரபு என்பதின் பொருள் - வழக்கம்
தழாஅல் என்பதின் பொருள் - தழுவுதல் (பயன்படுத்துதல்)
உலகில் தோன்றிய பொருட்கள் அனைத்தும் உருவானது - ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே
தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் மாறுவது - பொருள் மாறிவிடும்
தொல்காப்பியத்திலுள்ள அதிகாரங்கள் - 3
எழுத்திலக்கணம்
சொல்லிலக்கணம்
பொருளிலக்கணம்
தொல்காப்பியத்திலுள்ள ஒவ்வொரு அதிகாரங்களும் கொண்டுள்ள இயல்கள் - ஒன்பது இயல்கள்
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே - மொழி
ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து செயல்பட உதவுவது - மொழி
மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப் பயன்படுவது - மொழியின் மூலமாகவே
மொழியின் முதல் நிலை - பேசுவதும் கேட்பதும்
மொழியின் இரண்டாம் நிலை - எழுதப்படுவதும் படிக்கப்படுவதும்
மனிதர்களின் சிந்தனைகள் கடந்து வாழ காரணமாக இருப்பது -
எழுத்துமொழி
நீண்ட கால பயன்பாட்டிற்கு உரியது - எழுத்துமொழி
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது - பேச்சுமொழி
கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டது - பேச்சுமொழி
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும் படலடி இடம் பெற்ற நூல் - நன்னூல்