
கற்றல் படைப்பாற்றல் ஏற்படுத்தும் படைப்பாற்றல் சிந்தனையை தூண்டும் சிந்தனை அறிவாற்றலை அழிக்கும் அறிவாற்றல் உங்களை சிறந்த வழியா
கும் என்று கூறியவர் யார்? ஏபிஜே அப்துல் கலாம்எது ஒரு கண்கவர் பொருள் மட்டுமல்லாமல் ஆர்வத்தைத் கூடியதுமாகும்? பணம்
அடிப்படை கண்டுபிடிப்பான இது அன்றாட பரிவர்த்தனைகளுக்கு எளிதானது? பணம்
பொது ஏற்பு தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும் போது அதற்கான செலுத்து தொகையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதனையும் பணம் என்று கூறலாம் என்ற வரையறை யாருடையது? ராபர்ட்சன்
பணம் என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது? மானட்டா ஜூனோ என்ற ரோம் வார்த்தையில் இருந்து
மானட்டா ஜூனோ என்ற வார்த்தையின் பொருள் என்ன? ரோம் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணம்
இந்தியாவின் ரூபாய் என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது? சமஸ்கிருத வார்த்தை
ரூபியா என்பதன் பொருள் என்ன? வெள்ளி நாணயம்
சமீபகால பணத்தின் வடிவங்கள் எவை?
பண்ட பணம்
உலோக பணம்
காகித பணம்
கடன் பணம்
நிகர் பணம்
உலோக பணமாக பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் எவை எவை? தங்கம் வெள்ளி வெண்கலம்
உலோகத்தின் நிலையான எடை மற்றும் துல்லியம் ஆகியவை முத்திரையுடன் பரிமாற்ற கருவியாக செயல்பட்ட உலோகம் இது? தங்கம் வெள்ளி
எந்த நூற்றாண்டில் இந்தியாவின் பேரரசர் மிடாஸ் உலோக நாணயத்தை கண்டுபிடித்தார் என்று பழைய வரலாற்று ஆசிரியர் ஹோரேடட்ஸ் கூறுகிறார்? கிமு எட்டாம் நூற்றாண்டு
இந்தியாவில் எந்த நூற்றாண்டில் முதன் முறையாக மகாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ் ஹர்ஷா-பணம் பனானஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன? கிமு ஆறாம் நூற்றாண்டு
உலக நாணயங்கள் வெளியீட்டாளர்களில் பண்டைய இந்தியாவுடன் எந்த நாடுகளும் இருந்தன? சீனா மற்றும் மத்திய கிழக்கு லிடியா
தங்கம் வெள்ளி தாமிரம் அல்லது ஈயம் போன்ற நாணயங்களை துளையிட்டு வெளியிட்டவர்கள் யார்? மௌரியர்கள்
யாருடைய மரபுப்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தினர்? இந்திய கிரேக்க குஷாண அரசர்கள் கிரேக்க மரபுப்படி
எந்த நூற்றாண்டில் டெல்லி துருக்கிய சுல்தான் தங்க நாணயங்களில் இந்திய அரசர்களின் உருவத்தை நீக்கி இஸ்லாமிய எழுத்துக்களை பொறித்து வெளியிட்டனர்? பன்னிரண்டாம் நூற்றாண்டில்
தங்கம் வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்? டங்கா என்றும்
மதிப்பு குறைந்த நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்? ஜிட்டால்
1526ஆம் ஆண்டு முகலாய சாம்ராஜ்யம் முழு சாம்ராஜ் அதற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்தும் அந்த சகாப்த பரிணாம வளர்ச்சியில் 176 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் யார்? ஷெர்ஷா சூரி
ஷெர்ஷா வெளியிட்ட வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது? ரூபியா
யாருடைய காலத்தில் ரூபியா மற்றும் 40 தாமிரம் துண்டுகள் அல்லது பைசா போன்றவை பயன்படுத்தப்பட்டன? ஷெர்ஷா காலத்தில்
முகலாய காலம் முழுவதும் பயன்பாட்டில் இருந்த நாணயம் எது? வெள்ளி நாணயம்
1600 ஆம் ஆண்டில் முகலாய நாணயத்தை பிரபலப்படுத்தியது யார்? ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
யார் ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தது? 1717 முகலாயப் பேரரசர் பருக்ஸாயர்
ஆங்கிலேயர் காலத்தில் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
தங்க நாணயங்கள் கரோலினா
வெள்ளி நாணயங்கள் ஏஞ்சலினா
செம்பு நாணயங்கள் கப்ரூன்
வெண்கல நாணயங்கள் டின்னி
பண்டைய காலத்தில் பொதுவாக பணமாக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் (பண்டங்கள்) இவை? உரோமம் தோல் உப்பு அரிசி கோதுமை பாத்திரங்கள் ஆயுதங்கள்
பணத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக கருதப்பட்டது எந்த கண்டுபிடிப்பு? காகிதப் பணம் கண்டுபிடிப்பு
ஒரு நாட்டின் காகித பணத்தை கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் எது? ஒரு நாட்டின் மைய வங்கி
எந்த இரண்டு பணங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வளர்ந்தது? காகிதப் பணமும் கடன் பணமும்
கடன் பணம் அல்லது வங்கி பணம் என்று அழைக்கப்படுவது எது? காசோலை
எது பணத்தை குறிப்பதல்ல ஆனால் பணத்தின் பணிகளை மேற்கொள்ளும்? காசோலை
இவற்றின் பயன்பாடுகள் பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்?
உண்டியல்
கருவூல பட்டியல்
கடன் பத்திரங்கள்
சேமிப்பு பத்திரங்கள்
நெகிழி பணம் என்பது என்ன? கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள்
எந்தப் பணத்தின் நோக்கம் பணமில்லா பரிவர்த்தனை ஆகும்? நெகிழி பணத்தின் நோக்கம்
எது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதி பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னணு முறையாகும்? நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி
எதனை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம்? மின்னணு வங்கி
இதன் மதிப்பு என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்டம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்? பணத்தின் மதிப்பு
பணத்தின் மதிப்பு இதன் அளவை சார்ந்திருக்கும்? பண்டம் மற்றும் பணிகளின் விலை அளவை (பணத்தின் மதிப்பும் விலை அளவும் எதிர்மறை தொடர்புடையது)
இந்திய நாட்டிற்கான ரூபாய் குறியீடு யாரால் வடிவமைக்கப்பட்டது? தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது
இந்திய பணத்திற்கான குறியீடு எப்போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது? ஜூலை 15 2010
யாருடைய கருத்துப்படி பணம் என்பது ஒரு கடினமான கருத்தாகும் ஏனெனில் அது வேறுபட்ட துறைகளில் மூன்று பணிகளை குறிப்பிடுகிறது 1 கணக்கீட்டின் அழகு 2 மதிப்பீட்டின் அளவுகோல் 3 மதிப்பு நிலைக்களன்கள் குறிக்கிறது? ஸ்டோவ்ஸ்கி
பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவையெல்லாம் பணமாக பயன்படுத்தப்படுகிறது என்பது யாருடைய வரையறை? சர் ஜான் ஹிக்ஸ்
எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் என்று கூறியவர் யார்? பேராசிரியர் வாக்கர்
எதிர்காலச் செலுத்துகைக்கு ஒரு கருவியாக பயன்படுவது எது? பணம்
விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவது எதை குறிக்கும்? பணவீக்கம்
விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதை எதை குறிக்கும்? பணவாட்டம்
வருவாயில் நடப்பு நிகழ்வுக்கு பயன்படாத ஒரு பகுதி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது? சேமிப்பு
எந்தக் கணக்கில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பு நிலையான வருவாயும் விரும்புவார்கள்? நிரந்தர வைப்பு கணக்கு
நிரந்தர வைப்பு கணக்கு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கால வைப்பு கணக்கு
இந்திய அரசு சமீபத்தில் எப்போது கருப்பு பணத்திற்கு எதிராக பணமதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது? 2016 நவம்பர் 8
பணமோசடி நடவடிக்கை தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 2002
கருப்பு பணத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டரீதியான அமைப்பு எது? லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1988ஆம் ஆண்டு
வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா வரி விதித்தல் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 2015ஆம் ஆண்டு
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1988ஆம் ஆண்டு
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு திருத்தப்பட்டது? 2016ஆம் ஆண்டு
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 2016ஆம் ஆண்டு