Tuesday, August 31

ஊட்டச் சத்துக்கள் மற்றும் புரதங்கள்

 

  1. கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொண்ட கரிம கூட்டு பொருளின் பெயர் என்ன? கார்போஹைட்ரேட்டுகள்

  2. எவை உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய பிரதான மூலப் பொருள் ஆகும்? கார்போஹைட்ரேட்டுகள்

  3. குளுகோஸ்(ஒற்றைச் சர்க்கரை) சுக்ரோஸ்(இரட்டைச் சர்க்கரை) லாக்டோஸ் ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ்(கூட்டுச் சர்க்கரை) ஆகியவை _______________ இன் சில எடுத்துக்காட்டுகள்? கார்போஹைட்ரேட்டுகள்

  4. உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச் சத்தாகவும் அதற்கான கட்டமைப்பு பொருளாகவும் இருப்பது எது? புரதம் 

  5. செல்கள் மற்றும் திசுக்கள் வளர்ச்சிக்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் அவசியமானவை எவை? புரதம்

  6. புரதங்கள்  எவற்றை கொண்டு உருவானவை?  பல அமினோ அமிலங்களை

  7. மனித உடலில் எத்தனை அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உருவாகின்றன?  9

    ஃபினைல் அலனைன்
    வேலைன்
    திரியனைன்
    டிரிப்டோ ஃபேன்
    மெத்தியனைன்
    லுசைன்
    ஐச லுசைன்
    லைசின் மற்றும்
    ஹிஸ்டிடைன்

  8. உடலுக்கு ஆற்றலை வழங்குதல் மற்றும் செல்லின் அமைப்பை பராமரிப்பதோடு வளர்சிதைமாற்ற பணிகளிலும் ஈடுபடுவது எது? கொழுப்புகள்

  9. மனித உணவு-ஊட்டத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் எது?  ஒமேகா கொழுப்பு அமிலம்

  10. சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து எது?  வைட்டமின்கள் 

  11. உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும் தேவைப்படக்கூடியது  __________? வைட்டமின்கள்

  12. வைட்டமின் என்ற வார்த்தை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?  டாக்டர்  பங்க்

  13. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் எது?  வைட்டமின் A

  14.  மனிதனின் தோலால் உருவாகக்கூடிய வைட்டமின் எது? வைட்டமின் D

  15. சூரியக் கதிர்கள் மனிதத் தோலின் மீது விழும் போது எந்த பொருள் வைட்டமின் டி ஆக மாறுகிறது? டிஹைட்ரோ கொலஸ்டிரால் எனும் பொருள்

  16. கமெண்டில் எதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது? கால்சியம் உறிஞ்ச உதவுதல் மூலம்

  17. உயிரினங்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத்  தேவையான பல்வேறு உயிரியல் செயல்பாடுகளைப் புரிவதற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து எது? தாது உப்புக்கள் எனப்படும்  பொருள்கள்

  18. கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை மனித உடலுக்கு தேவையான - அதிகம் தேவைப்படும் பெரும் தனிமங்கள் ஆகும் 


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...