பண்டைய தமிழர் தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றிருந்தனர் என்பதை இதன் வாயிலாக அறியலாம்? இலக்கியங்கள் வாயிலாக
சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது எது? பண்பாடு
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை என்பது எது? பண்பாடு
பண்பாடு என்பதன் வேர்ச்சொல் எது? பண்படு
பண்படு என்பதன் பொருள் என்ன? சீர்படுத்துதல் செம்மைப்படுத்துதல்
பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? (DKC) D.K. சிதம்பரனார்
உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று குறிப்பிடும் நூல் எது? தொல்காப்பியம்
உயர்ந்தோர் என்பது எதனை குறிப்பிடுகிறது? பண்பாடு உடையவர்கள்
நல்ல வழி முறைகளை பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று குறிப்பிடும் நூல் இது? கலித்தொகை
இந்த உலகம் பண்புடையவர்களால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பண்புடையார் பட்டுண்டு உலகம் என்று கூறியவர் யார்? திருவள்ளுவர்
மனிதன் பேசும் மொழி உணவு உடை வாழ்க்கை முறை செய்யும் தொழில் எண்ணங்கள் ஆகியவை எவற்றை வெளிப்படுத்தும் காரணிகளாக திகழ்கின்றன? பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளாக
எது மாந்தனது அக உணர்வு வளர்ச்சியையும் சீர்மையையும் குறிப்பது? பண்பாடு
மாந்தனது புறத்தோற்ற வாழ்க்கையின் செம்மையை குறிப்பது எது? நாகரீகம்
மனிதனது அகத்தோற்ற பொலிவை உணர்த்துவது எது? பண்பாடு
மனிதனது புறத்தோற்ற பொலிவை குறிப்பது எது? நாகரீகம்
நாகரீக வளர்ச்சிக்கு துணை புரிவது எது? பண்பாடு
பண்பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எது? நாகரீகம்
தமிழர் தோற்றம் பற்றிய கருதுகோள்கள் எத்தனை? 4
குமரி கண்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள்
தென் இந்தியாவின் பழங்குடிகள்
ஆப்பிரிக்காவிலிருந்து அரேபிய கடல் வழியாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்கள்
மத்திய ஆசியா வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தவர்கள்
தமிழக பண்பாட்டின் தொன்மையை அறிந்து கொள்வதற்கு பெரிதும் துணை புரிபவை எவை? இலக்கண நூலாகிய தொல்காப்பியம் & சங்க இலக்கியங்களும்
பழந்தமிழரின் அகப்பொருள் வாழ்க்கை முறைகளைப் பற்றி கூறும் தொல்காப்பிய அதிகாரம் இது? பொருளதிகாரம்
பழந்தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் சங்க இலக்கிய நூல்கள் எவை? பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
சங்க இலக்கியங்களை அக வாழ்க்கையை எவ்வாறு பகுத்துள்ளனர்? அன்பின் ஐந்திணைகளாக
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
ஐந்திணையில் முதல் பொருட்களாக உள்ளவை எவை? நிலமும் பொழுதும்
ஐந்திணையின் கருப்பொருளாக உள்ளவை எவை? தெய்வம் வழிபாட்டு முறைகள் வாழ்க்கை முறை விளையும் பொருட்கள்
ஐந்திணைகளின் குறிப்புகளாக பாகுபடுத்தப்பட்டவை எவை? காதல் வாழ்வும் அதன் வழி தோன்றும் உணர்வு நிலைகளும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் கூறிய பெருமைமிக்க சங்ககாலப் புலவர் யார்? கணியன் பூங்குன்றனார்
சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சி சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றை பற்றி விரிவாக விளக்கும் நூல் இது? பதிற்றுப்பத்து
பாண்டியர்களின் தலைநகரம் ஆகிய மதுரையின் சிறப்பையும் வைகை ஆற்றின் சிறப்பையும் திருமால் முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடும் நூல் இது? இசைப்பாடல் ஆகிய பரிபாடல்
பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் எத்தனை? ஐந்து நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை 2 பொருநராற்றுப்படை 3.சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை 5.கூத்தராற்றுப்படை அல்லது மலைபடுகடாம்
நிலவளம், காதலின் சிறப்பு ஆகியவற்றை பற்றி பேசும் பத்துப்பாட்டு நூல்கள் எவை? குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு
காதலையும் வீரத்தையும் ஒருசேர பேசும் பத்துப்பாட்டு நூல் எது? நெடுநல்வாடை
பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பை கூறும் பத்துப்பாட்டு நூல் எது? மதுரைக்காஞ்சி
எந்த பத்துப்பாட்டு நூலில் கூறப்பட்டுள்ள நிலையாமை குறித்த கருத்துக்கள் கூட பாண்டிய மன்னன் காலத்தால் ஆற்ற வேண்டிய கடமைகளின் நினைவூட்டல் ஆகவே அமைந்துள்ளன? மதுரைக்காஞ்சி
சோழ நாடு தலைவலி வந்தாலும் கடவுளை மறுத்தாலும் வளம் பெற்றிருந்தது எவ்வாறு பட்டினப்பாலை சொற்றொடர் குறிப்பிடுகிறது? முட்டாச் சிறப்பின் பட்டினம்
தமிழர் ஆட்சி முறை ஆடல் பாடல் கலை வளம் மற்றும் புகார் மதுரை வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்புகள் வணிகச் சிறப்பு சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் தனிமனித ஒழுக்கம் நீதி வழங்கும் முறைமை ஆகியவை பற்றி விரிவாக பேசும் வரலாற்று ஆவணமாக திகழ்வது எது? சிலப்பதிகாரம்
சமய அற கருத்துகளையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் காப்பியம் இது? மணிமேகலை
பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படை காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என்பது இந்த நூலின் மையக் கருத்தாகும்? மணிமேகலையின் மையக் கருத்தாகும்
பசியைப் பிணியாக உருவகம் செய்து அதைப் போக்க வேண்டிய அவசியத்தையும் கூறுகின்ற புரட்சிக் காப்பியம் எது? மணிமேகலை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எந்த நூலின் பதிப்புரையில் கிரேக்க மக்கள் நாகரீக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே எகிப்தும் பண்டைய இந்தியாவும் நெடுங்காலமாக வாணிகத் தொடர்பு கொண்டிருந்தன என கூறப்பட்டுள்ளது? எரித்திரசிய கடலின் பெரிபுலஸ்
எந்த வெளிநாட்டவர்கள் எழுதிய நூல்கள் பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகம் பற்றி குறிப்பிடுகின்றன?
ரோமாபுரி அரசன் அகஸ்டஸ்-ன் சமகாலத்தவரான ஸ்டிராபோ என்பவர் எழுதிய பூகோள நூல்
பிளினி எழுதிய நூல் உயிரியல் நூல்
தாலமி எழுதிய பூகோள நூல்
சேர நாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் எதற்கு இடையில் அமைந்திருந்தன? கண்ணனனூருக்கும் கொச்சிக்கும் இடையில்
அரேபியாவில் இருந்தும் கிரேக்கத்தில் இருந்தும் வணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் செரிந்து கிடந்தன வென்று கூறும் நூல் எது? பெரிபுளஸ் நூல்
எந்த நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்? கிமு ஐந்தாம் நூற்றாண்டு முதல்
கிரேக்க மொழியில் இடம்பெற்ற தமிழ் சொற்கள் எவை?
அரிசி என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியில் அரைசா
கருவா (லவங்கம்) - கர்ப்பியன்
இஞ்சி வேர் - சின்ஞ்சி பேராஸ்
பிப்பாலி - பெர்பெரி
சாலமன் மகனுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு எந்த பொருட்களின் சிதைவுற்ற தமிழ் பெயர்கள் எவை?
துகிம் - மயில் தோகை
ஆல்மக் - அகில் மரங்கள்
தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியான பொருட்கள்? பல வகையான நறுமண பொருட்கள்
அயல் நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட உயிரினங்கள் யாவை? புலி சிறுத்தை யானை குரங்கு மயில் கிளி வேட்டை நாய்கள்
தமிழகத்தின் ஏற்றுமதிப் பொருட்களின் தரத்தில் மேலானவை என போற்றப்பட்டவை எவை? தமிழகத்து வேட்டை நாய்கள்
தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் ரோமானியர்களால் எவ்வாறு குறிப்பிடப்பட்டன?
தொண்டி - திண்டிஸ்
முசிறி - முசிறிஸ்
பொன்காடு - பகரி
குமரி - கொமாரி
கொற்கை - கொள்சாய்
நாகப்பட்டினம் - நிக்காம்
காவிரிப்பூம்பட்டினம் - கமரா
புதுச்சேரி - பொதுகே
மரக்காணம் - சோபத்மா
மசூலிப்பட்டினம் - மசோலியா
ஹிப்போகிரேட்டஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்? கிமு ஐந்தாம் நூற்றாண்டில்
எந்த கிரேக்க மருத்துவர் இந்திய மருத்துவ முறைகளையும் மருந்து வகைகளையும் கையாண்டு வந்தார்? ஹிப்போகிரேட்டஸ்
ஹிப்போகிரேட்டஸ் எந்த பொருளை இந்திய மருந்து என்று குறிப்பிட்டார்? மிளகு
தமிழகம் பல நாடுகளுடன் கொண்டிருந்த வணிக உருவானது தமிழரின் எந்த வளர்ச்சிக்கு உதவின? நாகரிகம் பண்பாடு கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு
தமிழக வரலாற்றை அறிய பெரிதும் துணை புரியும் பொருட்கள் எவை? தொல்பொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ள பொருள்கள்
கல்வெட்டுகளும் பட்டயங்களும்
நாணயங்கள்
நினைவுச் சின்னங்கள்
பண்டைய தமிழகத்தின் கோவில்களில் உள்ள கற்சுவர்கள் கோயில் மண்டபத்தில் கட்டுரைகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை எழுத்துக்களாக பொரித்து வைத்துள்ளவற்றை என்னவென்று அழைக்கப்படும்? கல்வெட்டு
கல்வெட்டுகளில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளவை எவை? மன்னரின் ஆணைகள் அவர்களின் சாதனைகள்
திருப்பரங்குன்றம், நாகமலை, யானைமலை, கீழக்கோயில்குடி ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் எந்தக் காலத்தைச் சார்ந்தவை என குறிப்பிடப்படுகிறது? சங்க காலத்தைச் சார்ந்தவை
எந்தக் காலக் கல்வெட்டுகள், கோயில்கள், இரதங்கள், கோயில்கள் கற்பாறைகள், தூண்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன? பல்லவர்கால கல்வெட்டுக்கள்
பல்லவர் காலக் கல்வெட்டுக்களில் எந்த இடங்களில் கிடைத்துள்ளவை குறிப்பிடத்தக்கவை? மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, திருச்சி, பல்லாவரம், மாமல்லபுரம், தளவானூர்
எந்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் பல்லவர் கால வரலாற்றை அறிய முடிகிறது? காஞ்சி கோவில்களில்
எந்த கல்வெட்டு சோழர் கால கிராம ஆட்சி முறையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது? பராந்தகச் சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு
சோழர் கால மக்களின் பண்பாடு அரசியல் வாழ்க்கை முறை நீதி சமூக உறவு பொருளாதார நிலை போன்றவற்றை எடுத்து வைக்கக்கூடிய கல்வெட்டுக்கள் காணப்படும் கோவில்கள் எங்கு உள்ளன? தஞ்சை ,திருவெற்றியூர், மேலப்பழுவூர், சிதம்பரம், திருவாரூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் காணப்படும் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில்
பொன், செம்பு ஆகிய உலக தகடுகளின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதற்குப் பெயர் என்ன? பட்டயங்கள்
அரசனின் பெயர், அவனது காலம், அளிக்கப்படும் நோக்கம் முதலியன பற்றி கூறுவதால் வரலாற்றைப் பற்றி அறிய பெரிதும் துணைபுரிபவை எவை? பட்டயங்கள்
எவை பிராகிருத மொழியிலும் வடமொழியிலும் தமிழிலும் காணப்படுகின்றன? பட்டயங்கள்
பாண்டியர் பட்டயங்களில் குறிப்பிடத்தக்கவை எவை?
வேள்விக்குடி பட்டயம்
தளவாய்புரம் செப்பேடு
சின்னமனூர் சாசனம்
சிவகாசி செப்பேடுகள்
சோழர் கால பட்டயங்களில் குறிப்பிடத்தக்கவை எவை?
திருவாலங்காட்டுப் பட்டயங்கள்
கரந்தைச் செப்பேடு
அன்பில் பட்டயங்கள்
லெய்டன் பட்டயங்கள்
மன்னர்கள் கொடையாக வழங்கிய இறையிலி நிலங்களையும் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களை பற்றியும் கூறும் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் எந்த மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன? பிராமி மொழி, பிராகிருத மொழி, தமிழ் மொழி
சங்க காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள் எவை? செப்பு நாணயங்கள்
சங்ககால செப்பு நாணயங்கள் எந்த வடிவில் இருந்தன? சதுர வடிவில்
சங்ககாலத் செப்பு நாணயங்களில் காணப்பட்ட உருவங்கள் எவை? ஒரு புறத்தில் யானை மறுபுறத்தில் இரட்டை மீன்கள்
பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் காணப்பட்ட சின்னங்கள் எவை? இரட்டை மீன் கப்பல் நந்தி
முதலாம் ராஜராஜன் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் சின்னங்கள் எவை? புலியும் அதனருகில் இரட்டை மீன் கொண்ட வடிவமும் (பாண்டியர்களை அடக்கி வலிமை பெற்றவனாக வாழ்ந்தான் என்பதற்காக)
எந்த மன்னனின் தங்க நாணயம் கிரந்த எழுத்தில் அவனுடைய பெயருடன் காணப்படுகின்றது? இரண்டாம் வரகுணனின் தங்க நாணயம்
எந்த கல்வெட்டில் அழியக்கூடிய பொருட்களான மரம், செங்கல், மண், சுண்ணாம்பு கொண்டு பல கோயில்கள் சங்க காலத்திலும் அதனைத் தொடர்ந்த களப்பிரர் காலத்திலும் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது? மகேந்திரவர்மனின் மண்டகப்பட்டு கல்வெட்டில்
எந்தக் காலம் முதற்கொண்டு கோயில்கள் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன? பல்லவர்காலம் முதற்கொண்டு
வீரம், கொடை, புலமை முதலியவற்றில் தேர்ந்தவர்களை நினைவு கூறும் பொருட்டு கிடைக்கப்பட்ட தமிழ் பண்பாட்டின் தொல்பொருள் சின்னங்கள் எவை? கற்பதுகைகளும் நடுகற்களும்
தமிழகத்தில் குகை கோவில்கள் உள்ள இடங்கள் (பல்லவர் காலம்) எவை? திருப்பரங்குன்றம், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமல்லபுரம், சித்தன்னவாசல்
தமிழகத்தின் சிறப்பான சிற்பக்கலைக்கு அடையாளமாக திகழ்பவை எவை? மாமல்லபுரம் ஒற்றைக்கல் ரதங்கள்
எந்த முனிவர்களின் வாழ்விடங்களாக குகைகள் அமைந்துள்ளன? சமண முனிவர்களின்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் என்று உறுதி செய்யும் நூல் எது? தொல்காப்பியம் நூலின் பாயிரம்
குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து நிலத்தை பாலை என்று பகுத்தது எது? இலக்கியங்கள்
பாண்டிநாடு, சோழநாடு, சேரநாடு, கொங்குநாடு போன்ற அரசியல் பிரிவுகளுக்கு காரணமானது எது? தமிழகத்தில் உள்ள இயற்கை அமைப்பே காரணமாக இருந்தது
மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் ஒன்றாக இணைகின்றன? நீலகிரி மாவட்டத்தில்
பழந்தமிழர் ஒன்றுபட்டு வாழாமல் தனித்தனி அரசியல் சமூகங்களாக பிரிந்து வாழ்ந்ததற்கு காரணம் எது? நாட்டின் இயற்கை அமைப்பே காரணம்
மன்னர்களுக்கும் மக்களுக்கும் உரிய ஒழுக்கங்கள் எதில் வரையறுத்து கூறப்பட்டுள்ளன? சங்க இலக்கியங்களில்
நெறி பிறழாத போர்முறை, மக்கள் நிலையை அறிந்து வரி விதித்தால், நேர்மையாக பொருளீட்டல், சான்றோர்களை மதித்தல், அவர்தம் வழிபாட்டு நெறி முறைகளை பின்பற்றுதல் முதலியன யாருடைய மாண்புகளாக கருதப்பட்டன? அரசர்களுக்கு உரிய மாண்புகளாக கருதப்பட்டன
வினையே ஆடவர்க்குயிர் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது? குறுந்தொகை
குடும்ப வாழ்க்கைக்குரிய அடிப்படைப் பண்புகளாக வரையறுக்கப்பட்டவை எவை? மக்கட்பேறு, விருந்தோம்பல், பெரியோரை மதித்தல் முதலியன
சங்க காலத்தில் முதற்சங்கம் அமைந்திருந்த இடம் எது? தென்மதுரை
சங்ககாலத்தில் முதற்சங்கம் யாரால் வளர்க்கப்பட்டது? காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை
சங்க காலத்தில் இடைச்சங்கம் அமைந்திருந்த இடம் எது? கபாடபுரம்
சங்ககாலத்தில் இடைச்சங்கம் யாரால் வளர்க்கப்பட்டது? வேண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை
சங்க காலத்தில் கடைச்சங்கம் அமைந்திருந்த இடம் எது? இன்றைய மதுரை
சங்க காலத்தில் கடைச் சங்கம் வளர்த்த புலவர்கள் யார் யார்? முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
சங்க காலத்தில் தமிழகத்தில் எந்த சமயத்தைச் சார்ந்த துறவிகள் சங்கம் ஏற்படுத்தி கல்வி தொண்டும், சமயத் தொண்டும் புரிந்தார்கள்? சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள்
மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்கள் என்று கூறப்படுபவை எவை? பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் (சங்க இலக்கியம் என அழைக்கப்படுகிறது)
மதுரையில் புலவர்கள் கூடி தமிழை ஆராய்ந்த வந்தனர் என்பதற்கும் பாண்டிய மன்னர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார்கள் என்பதற்கும் சான்றுகள் எதில் உள்ளன? சங்கப்பாடல்களில்
சங்கங்களைப் பற்றிய வரலாறு வேறு யாருடைய உரையிலும் கூறப்பட்டுள்ளது? நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையிலும்
எந்த வாழ்வை பிறருக்கு புலப்படுத்த முடியாது இதுவே அகத்திணை ஆகும்? அக வாழ்வை
புற ஒழுக்கத்தை எத்தனை திணைகளாக கூறுவர்? ஏழு திணைகளாக
அகத்திணை புறத்திணை சார்ந்த செய்திகளை விரிவாக விளக்கும் நூல் பிரிவு எது? தொல்காப்பியப் பொருளதிகாரம்
காதல் என்பது எதில் அடங்கும்? உரிப்பொருள்
புறத்திணைகள் 7 எனபகுத்த நூல் எது? தொல்காப்பியம்
புறத்திணைகள் 12கப் பகுத்துள்ள நூல் எது? புறப்பொருள் வெண்பாமாலை
எத்தனை புறத்திணைகள் போருக்கான காரணங்களையும் போர் நடைபெறும் முறைகளையும் கூறுகின்றன? எட்டு
வெட்சி
கரந்தை
வஞ்சி
காஞ்சி
உழிஞை
நொச்சி
தும்பை
வாகை
மன்னனின் வீரம் கொடை புகழ் முதலானவற்றை சிறப்பித்த பாடுவது எந்த திணை? பாடாண் திணை
ஒன்பது புறத்திணைகள் கூறாதனவற்றை அடக்கி கூறும் திணை எது ? பொதுவியல் திணை
விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் (540)
தொல்காப்பியத்தில் விருந்து என்னும் சொல் என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது? புதியது என்ற பொருளில்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்னும் செய்யுள் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? திருவள்ளூவர்
தொல்லோர் சிறப்பின் என்று விருந்துக்கு அடை கொடுத்து கூறிய புலவர் யார்? இளங்கோவடிகள்
விருந்தோம்பும் பண்பு கணவன்-மனைவியின் தலையாய கடமை என குறிப்பிடுவது எது? சங்க இலக்கியங்கள்
இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா என பார்த்து அவ்வாறு இருப்பின் வரவேற்று உணவு அளிப்பர் என்பதை கூறும் நூல் எது? நற்றிணை பாடல்
கோவலர் மழவிடை பூட்டிய குழாஅய்த் தீம்புலிச் செவியாடை தீரத் தேக்கிளைப் பாக்கும் புல்லி னைனாட்டு எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? அகநானூறு
ஒருநாள் சென்றாலும் இரு நாள் சென்றாலும் பலநாள் பலரோடு சென்றாலும் முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர் என்பதை யார் பாடல் மூலம் அறியலாம்? அவ்வையார் பாடல் மூலம்
காட்டு வழியே செல்லும் போது அவ்வழியாக பசியோடு வருபவர்களுக்கு தான் வைத்திருக்கும் உணவினை பகிர்ந்து கொடுப்பவர்கள் யார்? ஆயர்கள்
பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை குறிப்பிடும் நூல் எது? மடை நூல்
உணவு பற்றிய செய்திகள் எந்த நூல்களில் கூறப்பட்டுள்ளன? சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, பெருங்கதை
காலத்திற்கும் நிலத்துக்கும் ஏற்ற உணவுகளை எந்த நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்? சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, பெருங்கதை
எந்த பண்பு அரசர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகளில் தலையாயது என கருதப்பட்டது? வள்ளன்மை (பெற்ற பெருவளத்தைத் தக்கோர்க்கு பகிர்ந்தளிப்பது)
கல்வி, தறுகண், இசை, கொடை ஆகிய பெருமித பண்புகளில் ஒன்றாக விளங்கும் தன்மை எது? வள்ளல் தன்மை
மயிலுக்கு போர்வை தந்த குறுநில மன்னர் யார்? பேகன்
குறுநில மன்னனான பேகன் வாழ்ந்த ஆட்சி செய்த பகுதி இது? பழனி மலை
முல்லைக் கொடி படர்வதற்கு தன் தேரையே தந்த வள்ளல் யார்? பாரி வள்ளல்
பாரி வள்ளல் ஆட்சி செய்த பகுதி எது? பறம்புமலை
குதிரைகளை பரிசாக வழங்கிய வள்ளல் யார்? மலையமான் திருமுடிக்காரி
மலையமான் திருமுடிக்காரி ஆட்சி செய்த பகுதி எது? மலையமா நாடு
நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு பொருத்தி மகிழ்ச்சியடைந்த வள்ளல் யார்? ஆய் அண்டிரன்
கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் ஆண்டிரன் ஆட்சி செய்த பகுதி எது? பொதியமலை
அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்த வள்ளல் யார்? அதியமான்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆட்சி செய்த பகுதி எது? தகடூர்
மலைவாழ் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கிய வள்ளல் பெருமான் யார்? நல்லி
கடையெழு வள்ளல்களில் ஒருவரான நல்லி ஆட்சி செய்த மலை எந்த மலை? கண்டீர மலை
யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கிய குறுநில மன்னன் யார்? வல்வில் ஓரி
வல்வில் ஓரி ஆட்சி செய்த மலை எந்த மலை? கொல்லிமலை
சங்க காலத்தில் யவனர்கள் தமிழகத்தில் எந்த இடங்களில் இருந்து தங்க நாணயங்களை வெளியிட்டனர்? மதுரை, புகார் ஆகிய இடங்களில் இருந்து
Monday, August 30
தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்
ஏழாம் வகுப்பு தமிழ்
தமிழின் சிறப்புகள் கொல்லாமை - தமிழின் குறிக்கோள் பொய்யாமை - தமிழின் கொள்கை தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...
-
தனிநபர் தகவல் பிறப்பு திசம்பர் 10, 1878 இடம் தொரப்பள்ளி , சென்னை மாகாணம் , பிரித்தானிய இந்தியா ( இன்றைய தமிழ்நாட்டில் ) இந்தி...
-
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் என...
-
சிற்பக்கலை மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக கொள்ளக்கூடிய கலை என்னும் கலை? - சிற்பக்கலை வரலாற்றின் வாயிலாக இன்றும் வ...