வரலாறு :
நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் காலவரிசைப்படி கூறுவது
வரலாற்றுக் காலம்:
அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் பிற ஆதாரங்களும் கொண்ட காலம்
தமிழ்நாட்டில் உள்ள அகழ்வாராய்ச்சி இடங்கள் :
- திருநெல்வேலி மாவட்டம் - ஆதிச்சநல்லூர் (நூறாண்டுகள் அகழ்வாராய்ச்சி)
- 2004ம் ஆண்டு ஒரே இடத்தில் 160 க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள்
பழைய கற்கால மனிதன்
(கிமு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்)
- நெருப்பைக் கண்டு பிடித்தான்
- இடி மின்னல் இவற்றைக் கண்டு பயந்து அவற்றை வணங்கினான்
- இலைகள் மரப்பட்டைகள் விலங்குகளின் தோல் ஆகியவற்றை உடுத்தினார்கள்
- உணவைத் தேடி அலைந்தனர்
- விலங்குகளை வேட்டையாடினர் (நீங்களும், பெண்களும்)
- மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் மத்திய பிரதேசத்தில் உள்ள பிம்பேட்கா இந்த குகையில் உள்ளது
இந்தியாவில் பழைய கற்கால கருவிகள் காணப்படும் இடங்கள்
- மத்தியப் பிரதேசம் - சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மாகேஸ்வா
- ராஜஸ்தானின் - லூனி ஆற்றுச் சமவெளி
- கர்நாடகா - bagalkot
- ஆந்திர பிரதேசம் - கர்னூல் குகை மற்றும் ரேனிகுண்டா
- தமிழ்நாட்டில்:
- வடமதுரை அத்திரம்பாக்கம் பல்லாவரம் காஞ்சிபுரம் வேலூர் திருவள்ளூர்
புதிய கற்காலம்
(கிமு 10 ஆயிரம் முதல் கிமு 4 ஆயிரம் வரை)
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படி நிலையை புதிய கற்காலம் எனலாம்
மனிதன் முதன் முதலில் பழகிய விலங்கு நாய்
- பால் இறைச்சி முதலானவற்றை உணவாகக் கொண்டார்
- செதுக்கப்பட்ட நயமான கூர்மையான கேட்கவில்லை பயன்படுத்தினார்
- புதிய கற்கால மாற்றத்தின் முக்கிய மாற்றம் உணவு உற்பத்தி ஆகும்
- சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது
- சக்கரத்தை பயன்படுத்தி மட்பாண்டங்கள் செய்தனர்
- பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்
- கற்கால மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு
- மண்குடிசை நகரை அமைத்தான்
- குடிசைகள் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவிலிருந்து மேலும் இவை தரைமட்டத்திற்கு கீழ் பள்ளமான இடங்களில் இடங்களில் அமைக்கப்பட்டன குடிசைகளின் மேல் மேற்கூரைகள் வேய்ந்தனர்
- பயிர்த்தொழில் செய்தனர்
- இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது
புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள்
தமிழ்நாட்டில் திருநெல்வேலி தான்றிக்குடி புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி சேலம்
செம்பு கற்காலம்
(கிமு 3 ஆயிரம் முதல் கிமு 1,500 வரை)
புதிய கற்காலத்தின் முடிவில் செம்பு என்ற உலோகத்தின் பயன்பாட்டை அறிந்தனர்
- மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் மேல் வண்ண ஓவியங்கள் வந்திருந்தனர்
- ஹரப்பா நாகரீகம் செம்பு காலத்தைச் சார்ந்தது
இரும்புக் காலம்
(கிமு 1,500 முதல் கிமு 600 வரை)
இரும்பினால் கருவிகள் செய்த காலம்
- கற்பனைத்திறன் காணப்பட்டது
- வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சார்ந்தது
உலோகக் கலவைகள்
இரும்பு + குரோமியம் = சில்வர்
செம்பு + வெள்ளியம் = வெண்கலம்
செம்பு + துத்தநாகம் = பித்தளை
இரும்பு + மாங்கனீசு = எக்கு
பின்குறிப்பு (முக்கிய தோற்றங்களின் ஆண்டுகள்)
- பூமி 460 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது
- மனிதன் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் (ஹோமோ செபியன்ஸ்)
- வேளாண்மை சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
- நகரங்கள் தோன்றியது 4700 ஆண்டுகளுக்கு முன்னர்
தொன்மைக்காலம் என்பதனை
- முற்காலம், பழங்காலம், பண்டைக்காலம், ஆதிகாலம், தொல்பழங்காலம்
சிந்துவெளி நாகரிகம்
சிந்துவெளி நாகரிகம் (ஹரப்பா நாகரீகம்)
- செம்பு கல் இரண்டையும் பயன்படுத்தியதால் செம்பு கற்காலம் எனப்பட்டது
- சிந்துவெளி நாகரிகம் இந்திய நாகரிகத்தின் தொடக்கம்
- 1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் ஆங்கிலேயர்கள் இருப்புப்பாதை அமைத்தனர்
- 1921இல் அகழ்வாய்வு செய்து இந்தியாவின் முதுபெரும் நகரம் ஹரப்பா (சிந்து சமவெளிப் பகுதி) என்பதை கண்டறிந்தனர் ஆங்கிலேயர்கள்
- ஹரப்பா நாகரீகம்
- 4700 ஆண்டுகள் முற்பட்டது
- மொஹஞ்சதாரோவின் கட்டட இடிபாடுகள் போன்று வேறு பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கட்டட இடிபாடுகள்
- மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல்
- சிந்துவெளி நகரங்களின் கோட்டைப் பகுதியில் நுணுக்கம் மிக்க குளம் நீர் கசியாமல் இருக்க மெழுகு பூசி கட்டப்பட்டிருந்தது
- வீடுகளின் முன் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தன
- சிந்துவெளி நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன
- சிந்து சமவெளி நாகரிகத்தின் (நகர நிர்வாக முறை) ஆட்சி முறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்கான காரணங்கள்
- பொது கழிவுநீர் திட்டம் பொது குளம் பொதுமண்டபம் தெருவிளக்குகள் தெருக்களில் காணப்படும் குப்பைத்தொட்டிகள்
- மொஹஞ்சதாரோவில் நடைமுறையில் இருந்த அறிவியல் தொழில்நுட்ப முறை - பயன்பாட்டு அறிவியல்
- தங்கம் மற்றும் வெள்ளி தந்தம் விலை உயர்ந்த கற்கள் - ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தினர் (ஏழைமக்கள் - கிளிஞ்சல் தாமிரம்)
- சுடுமண் முத்திரைகளில் சித்திர வடிவ எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது (இவ்வெழுத்துக்கள் தொல் தமிழுடன் தொடர்புடையன என்று கூறப்படுகின்றது)
- ஏடுகளில் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டிருந்தது
- விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும்
- கோதுமை பார்லி - விளைவித்தனர்
- மக்கள் பருத்தி கம்பளி ஆடைகளை அணிந்தனர்
- சிந்துவெளி மக்கள் டெர்ரகோட்டா எனப்படும் சுடுமண் பயணம் செய்வதும் திறமை மிக்கவர்களாக இருந்தனர்
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நாட்டிய மங்கை உருவச்சிலை (வெண்கலம்)
- தாடியுடன் காட்சி தரும் ஒருவரின் சுண்ணாம்புக் கற்சிலை
- பசுபதி என்ற சிவனையும் பெண் கடவுளையும் லிங்கம் சூலாயுதம் மரம் - இவற்றை வணங்கினர்
சிந்து சமவெளி நாகரீகம் அழிவிற்கான காரணங்களாக கூறப்படுபவை
- மரத்தாலான பொருள் இல்லாமையால் - தீயினால்
- உள்நாட்டுப் போர்
- அடிக்கடி மாறும் சிந்துநதிப் போக்கின் வெள்ளப் பெருக்கினால் - புதையுண்டிருக்கலாம்
- ஆரியர்களால்
- மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதனால் - அயலவரின் படையெடுப்புக்காக
குறிப்பு:
- ஹரப்பா - சிந்தி மொழி - புதையுண்ட நகரம்
- மொஹஞ்சதாரோ - சிந்தி மொழி - இடுகாட்டு மேடு
பண்டைத் தமிழகம்
- திருப்பதி மலைக்குத் தெற்கில் வாழும் மக்கள் பேசும் மொழி - தமிழ்
- வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் - பாடியவர் பவணந்தி முனிவர் (இலக்கண நூலான நன்னூல்)
- செந்தமிழ் நாடெனும் போதினிலே - தேசியக்கவி பாரதியார்
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்
- ஆங்கிலேயர் ஆட்சியின்போது தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் எனப்பட்டது
- 1967 ம் ஆண்டு முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது
- தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள்
- தென்பகுதி - பாண்டியர்கள்
- வடபகுதி - சோழர்கள்
- மேற்கு பகுதி - சேரர்கள்
- வரலாற்று காலத்துக்கு முன்னர் குமரிமுனைக்குத் தெற்கே உள்ள பகுதி இந்துமாக் கடல் பகுதி ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்தது , இதில் பஃறுளி ஆறு ஓடியது (இந்நிலப்பகுதியில் நல்லாட்சி புரிந்த அரசர்கள் பாண்டியர்கள்)
- பாண்டியர்களின் தலைநகர் தென்மதுரை - முதல் தமிழ்ச்சங்கம் (தலைச்சங்கம்)
- கபாடபுரம் - இரண்டாம் தமிழ்ச் சங்கம் (இடைச்சங்கம்)
- இன்றைய மதுரை - மூன்றாம் தமிழ்சங்கம் (கடைச்சங்கம்)
- மதுரை மூதூரில் பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந்த நகரமே கூடல் என்று பெயர் பெற்றது
- லெமூரியா கண்டம் (குமரிக்கண்டம்) (ஒரு சாரார் கருத்து)
- கடல்கோளால் மூழ்கிப்போனது
- பல்லுயிர்களும் பெருகுவதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழல் நிலவியது
- குமரிக்கண்டம் (லெமூரியா கண்டம்) - முதல் மாந்தன் இனம் தோன்றியது - இவர்கள் பேசிய மொழி தமிழின் மூலமொழி
- லெமூரியா கண்டம் (குமரிக்கண்டம்) (ஒரு சாரார் கருத்து)
- குமரி கண்டத்திற்கு முன்னதாக லெமூரியா கண்டத்தை உள்ளடக்கிய ஒரு பெரும் கண்டம் ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்தவாறு நிலவியது - அந்தக் கண்டத்தில் வாழ்ந்த லெமூர் என்ற குரங்கின் பெயரால் லெமூரியா கண்டம் எனப்பட்டது
- இந்த மனித குரங்கு முதல் மனிதன் பிறக்க காரணம்
- இங்கு தோன்றிய மனிதன் பேசிய மொழியின் மூலமே தமிழின் தொன்மை மொழி
- தமிழ் நாட்டைக் குறித்து அறியக்கூடிய வரலாற்று காலத்தில் இருந்து தொடங்குகிறது
- சங்க காலம் திருவள்ளுவருக்கு முன் 200 திருவள்ளுவருக்குப் பின் 200 (திருவள்ளுவருக்கு முன் 300 திருவள்ளுவருக்குப் பின் 300 ) - இரு வேறு கருத்துகள்
- தமிழ் மக்களின் நாகரிகம் பழக்க வழக்கம் பண்பாடு ஆட்சிமுறை முதலானவற்றை நாம் அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியங்கள் உதவுகின்றன
- கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தொல்காப்பிய இலக்கண நூல் தோன்றியது
- அனைத்து சமயத்தாரும் வியந்து போற்றும் நூல் திருக்குறள்
- தமிழ் மொழி
- இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்ததால் - செந்தமிழ்
- பிறமொழிகளில் துணையின்றி தனித்து வளரும் திறன் பெற்றிருப்பதால் - உயர்தனிச் செம்மொழி
- பண்டைக்காலத்தில் எகிப்து யவன நாடு ரோம் சீனா முதலான நாடுகளுடன் பண்டமாற்று வணிகம் செய்து வந்தது தமிழகம்
- சங்க காலத்தில் நிலத்தை ஐந்து இயற்கை பிரிவாக பிரித்து வழங்கியவர்கள் - தமிழ்ப் புலவர்கள்
- குடி மக்களை காப்பது நமது உயிரினும் மேலான கடமையாக கொண்டவர்கள் பண்டைய மன்னர்கள்
- உயர்ந்த தொழிலாக மதிக்கப்பட்டது உழவுத்தொழில்
- அடுத்த நிலையில் நெசவுத்தொழில் (மனிதன் மானம் காக்கும் துணி தரும்)
மூவேந்தர்கள்
பாண்டியர்கள் :
- பீடும் பெருமையும் வாய்ந்தவர்கள் - முடத்திருமாறன்
- தன் மீது போர் தொடுக்க வந்த தமிழக அரசர்கள் ஏழு பேரை ஒரு சேர வென்ற பாண்டிய மன்னன் - தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
- யானோ அரசன் யானே கள்வன் - சிலப்பதிகார புகழ் பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரர்கள்:
- சேர மரபில் வந்தவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் (சிலம்பு புகழ்) இருவரும் வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் (புகழோங்கியவர்கள்)
சோழர்கள் :
- (புகழ் மிக்கவர்கள்) கரிகால் பெருவளத்தான், கிள்ளிவளவன்
- இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சோழ மன்னன் கரிகாலனால் தனது ஆட்சிக் காலத்தில் ஈலத்தை வென்று அந்த நாட்டவரை கைதிகளாக கொண்டுவந்து காவிரிக்குக் கரை கட்டினான்
- இன்றளவும் நிலைத்துள்ள கல்லணை கரிகாலன் கட்டியது
- இடைக் காலத்தில் வாழ்ந்த ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் இவர்கள் பெரும் புகழ் பெற்றவர்கள் ஆவர் - இவர்கள் வடபுலத்தை மட்டுமின்றி சாவகம் கடாரம் முதலான கீழ்த்திசை நாடுகளையும் வென்றதாக வரலாறு கூறுகிறது
பண்டைத் தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை நிலை
(மூவேந்தர்களின் ஆட்சி)
- செய்யும் தொழிலின் காரணமாக வேறுபாடு தோன்றியது குலங்கள் பல தோன்றின
- வருணாசிரமம் முறையில் பிறப்பினால் வேற்றுமை பாராட்டும் நிலை அக்காலத்தில் இடம் பெறவில்லை
- பெண்கள் உரிமை கொண்டவராக இருந்தனர்
- புரோகிதர்கள் நடத்தும் சடங்குகள் வேள்வித் தீ வளர்த்தல் வடமொழி மந்திரம் - இல்லை
- திருக்கோவில்கள் கட்டும் முறை வளராத காலம் - போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நடுகல் மற்றும் தமது முன்னோர்களை வழிபட்டு வந்தனர்
- அறுவடை விழா பொங்கல் விழா இளவேனில் பருவ விழா மற்றும் இந்திர விழா (தலைநகரில்)
- குறிப்பு : பின்னாளில் புராணங்களில் வழியாக பரவிய பல பண்டிகைகளை அக்கால மக்கள் அறிந்திருக்கவில்லை
(இரண்டாம் பருவம்)
ஆறாம் வகுப்பு வரலாறு
வேதகாலம்
ஆரியர்கள்
· ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள்
· தொழில் கால்நடை மேய்த்தல் ( புதிய புல்வெளிகளை தேடி இடம்பெயர்ந்தனர்)
· வட இந்தியா முழுவதும் பரவி குடியேறியவர்கள்
· ஆரியர்கள் குடியேறிய பகுதி ஆரியவர்த்தம்
· ஆரியர்களின் இனம் - பெரியோர்கள் பாடிய வேண்டுதல்களை வேதங்களாக தொகுத்தனர் (பிறந்தநாள் வேத காலம் எனப்பட்டது)
முற்பட்ட வேதகாலம் அல்லது ரிக்வேத காலம்
( கிமு 1500 - கிமு 1000)
· ஆரியர்கள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் பகுதியில் உள்ள சிந்து பகுதியில் வாழ்ந்தனர்
· ஆரியர்கள் முதலில் பஞ்சாப் பகுதியில் இருந்த சப்தசிந்து எனப்பட்ட ஏழு நதிகள் பாயும் பகுதியில் குடியேறினர்
· ஆரியர்களின் சமூக சமுதாய அமைப்பு
o குடும்பம் → கிராமம் (தலைவர் கிராமணி)→ விஷ் (தலைவர் விசுவ பதி) → ஜனா (தலைவன் ராஜன் - அரசன்) → ஜனபதா (அரசர் பிரஜாபதி)
· சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம்
· வீரமும் வலிமையும் மிக்கவனே ராஜன்
· ராஜத்தின் வாழ்ந்த மக்கள் பிரஜைகள்
· மகாஜனபதம் என்பது பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு
· சேனானி படைத்தலைவர்
· சபா என்பது முதியோர் அவை
· சமிதி என்பது ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
· முற்பட்ட வேத காலத்தில் மகளிர் நிலை :
o பெண் கவிஞர்கள்
விஸ்வவாரா
அபலா
கோஷா
விஸ்வவாரா
அபலா
கோஷா
லோபமுத்ரா
· விதவை மறுமணம் அனுமதிக்கப்பட்டது
· ஒருதாரமணம் பலதாரமணம் வழக்கத்தில் இருந்தது
· சாதிப் பிரிவுகள் இல்லை
· முக்கிய தொழில்: கால்நடை வளர்ப்பு. வேளாண்மை
· இரும்பு உலோகத்தை பயன்படுத்தினர்
· பண்டமாற்று முறை வழக்கத்தில் இருந்தது
· நிஷ்கா தங்க அலகுகள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன
· உணவு : கோதுமை பார்லி பால் தயிர்
o சோமபானம் சுரா பானம்
· பருத்தி கம்பளி ஆடை அணிந்த
· கோயில்களோ சிலைவழிபாடு முந்தைய வேத காலத்தில் இல்லை
· யாகங்களையும் சமயச் சடங்குகளையும் செய்தனர் (அஸ்வமேதயாகம் ராஜசூயயாகம் வாஜபேயம்)
பிற்பட்ட வேதகாலம்
(கிமு 1000 முதல் கிமு 600 வரை)
· ரிக் வேத காலத்திற்குப் பின்னர் யஜுர் சாம அதர்வண வேதங்களின் காலம்
· விரிவான அரசுகள் எழுச்சி பெற்றன
· பிராமணங்கள் ஆரண்யங்கள் உபநிடதங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கங்களும் இயற்றப்பட்டன
· முக்கிய அரசாட்சி பகுதியாக கங்கைச் சமவெளிப் பகுதி விளங்கியது
· சபா சமிதி - அமைப்புகள் வலுவிழந்தன
· சாண உரமிடும் முறை தோன்றியது
· நிஸ்க்கா சுவர்ணா சதமான - முதலான தங்க வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன
· சாதி அமைப்பு முறை தோன்றி வலுப்பெற்றது
· உடன்கட்டை ஏறும் முறை நடைமுறையில் இருந்தது
· கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள் காரைக்குடி
· அரச குமாரர்களுக்கு தனுர்வேதம் எனப்படும் போர்க்கலை கற்பிக்கப்பட்டது
· வர்ணாசிரம முறை தோன்றியது
· உயிர்ப் பலி இடுதலும் கடவுளை வணங்கும் வழிபாட்டு முறைகளும் முக்கியத்துவம் பெற்றன - இதனை எதிர்த்து சமண பௌத்த சமயங்கள் தோன்றின
திராவிடர்கள்:
· புலியை அறிந்திருந்தனர் : குதிரை தெரியாது
· செம்பு தெரியும் : இரும்பை தெரியாது
· செங்கல் வீடு : பருத்தி ஆடை
· வேளாண் தொழில் மற்றும் வணிகம் : நகர நாகரீகம்
ஆரியர்கள்:
· குதிரை தெரியும் : புலி தெரியாது
· இரும்பு தெரியும் : செம்பு தெரியாது
· களிமண் மற்றும் மூங்கில் வீடு : கால்நடை வளர்ப்பு மற்றும் போர் புரிதல்
· கம்பளி பருத்தி மற்றும் விலங்குகளின் தோல் (ஆடைகள்) : கிராம நாகரிகம்