Wednesday, April 3

ஒன்பதாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்திட்டம் (இயல் 7)






சிற்பக்கலை 




மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக கொள்ளக்கூடிய கலை என்னும்  கலை? -  சிற்பக்கலை

 வரலாற்றின் வாயிலாக இன்றும் விளங்குபவை இவை? -  சிற்பங்கள்

 தமிழர் அழகியலின் வெளிப்பாடு இது? -  சிற்பங்கள்

தமிழர்  கல்லில் வடித்த கவிதைகள் எவை? -  சிற்பங்கள்

கல் உலோகம் செங்கல் மரம் போன்றவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை பெயர் என்ன? -  சிற்பக்கலை

 சிற்பக் கலையின் உறுப்புகள் 10 என்று கூறும் நூல் எது? -  திவாகர நிகண்டு

 சிற்பக் கலையைப் பற்றிய குறிப்புகள் காணப் படும் நூல்கள் எவை? -   திவாகர நிகண்டு மற்றும் மணிமேகலை

 சிற்பக்கலையை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவை? -  முழு உருவச் சிற்பங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள்

 சிற்பங்கள் எத்தனை நிலைகளில் அமைக்கப்படுகின்றன? -  நான்கு நிலைகளில்
 (தெய்வ உருவங்கள்,  இயற்கை  உருவங்கள்,  கற்பனை உருவங்கள் மற்றும் முழு வடிவ உருவங்கள்)

 பிரதிமை உருவங்கள் என்பன எவை? -  முழு வடிவ உருவங்கள்

கற்கவிஞர்கள் என்று சிறப்பிக்கப்படும் அவர்கள் யாவர்? - சிற்பிகள்

 பல்லவர் கால சிற்பங்கள் எதனால் அமைக்கப்பட்டன? -  சுதையினாலும் கருங்கற்கள்

 பல்லவர் காலத்தில் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்ட சிற்பங்களின் வடிவங்கள்? - யாழி,  சிங்கம்,  தாமரை மலர்,  மற்றும் நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த வட்டங்கள்

 மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை ( சுதைச் சிற்பங்கள்) இருந்ததை  இதன் மூலம் அறிய முடிகிறது? -  மணிமேகலை மூலம்

எந்த கோவில் சுற்றுச் சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது? -  காஞ்சி கைலாசநாதர் கோவில்

பல்லவர் காலத்திய கலை நுட்பத்துடன் கூடிய சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்? -  மாமல்லபுரம் காஞ்சிபுரம் திருச்சி மலைக்கோட்டை

பாண்டியர் காலத்திய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஊர்கள் எவை? -  திருமயம்,  பிள்ளையார்பட்டி,  குன்றக்குடி,  திருப்பரங்குன்றம் , கழுகுமலை வெட்டுவான் கோவில்

கல் சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது? -  சோழர் காலத்தில்

 சோழர் காலச் சிற்பங்களின் கருவூலங்களாக
   முதலாம் ராஜராஜன் -  தஞ்சை பெரிய கோவில்
   முதலாம் ராஜேந்திரன் -  கங்கைகொண்ட சோழபுரம்
   இரண்டாம் ராஜராஜன் -  தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்
   இரண்டாம் குலோத்துங்கன் - திரிபுவன வீரேஸ்வரம்

 நடன முத்திரைகளுடன் கூடிய சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ள இடம்? -  புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை  (புதிதாக இருந்தாலும் நல்லா நர்த்தனம் ஆடுகிறார்)

 ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் கொண்ட சிற்பம் உள்ள கோவில் இது? - கங்கைகொண்ட சோழபுரம்  (கங்கைக்குள் ஒரு கல்லில் சிங்கம் கிணற்றுக்குள் விழுந்து நவக்கிரகத்தை சுற்றி வருகிறது)

 தமிழகத்தில் உலோக படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்? -  சுவாமிமலை கும்பகோணம் மதுரை

 அரசு கவின்கலைக் கல்லூரி உள்ள இடங்கள்? -  சென்னை கும்பகோணம்

அணிகலன்கள் அணிந்து நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்கள் ஆனது யாருடைய ஆட்சிக்காலத்தில்? -  விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில்

 குதிரையின் உருவங்களை சிற்பங்களாக இடம் பெறச் செய்தவர் யார்? -  விஜயநகர மன்னர்கள்

 பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கல்தூண்கலையும் அமைத்தவர்கள் யார்? - விஜயநகர மன்னர்கள்

 நாயக்கர் கால சிற்பக் கலை கலைநுட்பத்தின்  உச்சநிலை படைப்பு என்று கூறப்படுவது இது? -  கோயம்புத்தூர் அருகே உள்ள சிவன் கோவில் சிற்பங்கள்

 ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச்  செதுக்கப்பட்டுள்ள ஊர் எது? -  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள திருநாதர் குன்று

 இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தன்மை பெருங்காப்பியம் இது? - இராவண காவியம்

 பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்? -  புலவர் குழந்தை

 யாப்பதிகாரம் தொடையதிகாரம் ஆகிய 30க்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்தவர் யார்? - புலவர் குழந்தை

 உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது இது? - பக்தி இலக்கியம்

அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற கவிதையை எழுதியவர் யார்? - ஆண்டாள்

நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களை உடையது? -  140 பாடல்கள் (நாச்சியார் 40)

 சாகித்ய அகாடமி பெற்ற சிறுகதை நூல்கள்
 1970 அன்பளிப்பு கு அழகிரிசாமி (அழகா இருந்தா 70 வயசுலயும் கிப்ட் கிடைக்கும்)

 1979 சக்தி வைத்தியம் தி ஜானகிராமன் (79 வைத்தியம் பண்ணா ராமனுக்கு  சக்தி கிடைக்க வச்சிடுவார்)

1987 முதலில் இரவு வரும் - ஆதவன் (எட்டு ஏழு அதுக்கு முன்னாடி ராத்திரிக்கு முன்னே  சூரியன் வரும்)

 1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன்  (அப்பாவோட சினேகிதர் யாரு (96) அசோகமித்திரன்)

 2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுச்சாமி ( இவர் பெரிய 8 மின்சாரத்தை மேலாண்மை செய்யறாரு)

 2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் (பத்து பேரு சூடிய பூ வை நெஞ்சில் சூடவா)

 2016 ஒரு சிறு இசை வண்ணதாசன்

 சிறுகதையில்  உள்ள மூன்று பகுதிகள் -  ஆரம்பம் மத்திய சம்பவம் மற்றும் அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி

தி ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் இந்த வார இதழில் எழுதினார்?  -  சுதேசமித்திரன்  (1967) (ஜானகிராமன் 67 வயசுல உத்தேசமா ஜப்பான் போயிட்டு வந்தார்)

 ஜானகிராமன் தன்னுடைய ரோம் மற்றும் செக்கோஸ்லோவேகியா சென்ற அனுபவங்களை என்ற தலைப்பில் எழுதி 1974 நூலாக வெளியிட்டார்? -  கருங்கடலும் கலைகடலும்  (நாங்கள்  எல்லோரும் செக்குமாடு மாதிரி  கடலுக்கு போறோம் )

 ஜானகிராமன் காவிரிக் கரை வழியே நடந்த பயணத்தை வாழி காவேரி என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்  மற்றும் ஒரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல் -  ஜானகிராமன் காவிரிக் கரை வழியே நடந்து போறார் ஏன்னா  அவரோட வீடு வெறும் 50 மெயில் தூரத்தில்  இதான் இருக்கு

 தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப்  படைத்தவர் யார்? - தி  ஜானகிராமன்

அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்ற கோட்பாட்டை கொண்டவர் யார்? -  ஜானகிராமன்

 தமிழ் கதையுலகம் நவீனமானதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் களில் ஒருவர் - ஜானகிராமன்

செய்தி என்ற சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?-  சிவப்பு ரிக்க்ஷா

 தஞ்சையைச் சார்ந்த ஆசிரியர்கள் -  உ வே சா,   ஜானகிராமன்,  மௌனி, தஞ்சை ராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர், தஞ்சை பிரகாஷ்,  (தஞ்சாவூர் வந்த  உ வே சா  வை பார்த்து  ஜானகிராமன் மௌனமா நின்னார் )

 சங்கீத ரத்னாகரம் என்றதும் நூல் எழுதப்பட்ட ஆண்டு? -  13 நூற்றாண்டு

 நாகஸ்வர கருவி எந்த மரத்தில் செய்யப்படுகிறது? -- ஆச்சா மரத்தில்

 நாகஸ்வர கருவியின்  மேல் பகுதில் காணப்படும் சீவாளி என்ற கருவி எதனால் ஆனது? - நாணல் புல்

 தமிழர் வழிபாடுகள் எவை ? - திணை நில தெய்வ வழிபாடு,  இயற்கை வழிபாடு,  நடுகல் வழிபாடு

 வெற்றியைக் கொண்டாட தமிழர்கள் வணங்கிய தெய்வம் இது?  -  கொற்றவை என்னும் பெண் தெய்வம்

 தமிழர் பல்வேறு விழாக்களை கொண்டாடினர் என்பதை எந்த இலக்கியங்கள்  வாயிலாக அறிந்துகொள்ளலாம்? -  அகநானூறு கலித்தொகை பரிபாடல்  (பழந்தமிழர்கள் அகத்தில் கலி சமைத்து பாடல் பாடி விழாக்கள் கொண்டாடினர்)

அறுமீன் சேரும் அகவிருள்  நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி என்னும் பாடல் வரி இடம்பெறும் நூல் -  அகநானூறு  (அறுமீன் ஆக பிறந்து விளக்கு வைக்கும் நேரம் வரைக்கும் காத்து இருந்தாலும் பொண்ணு அகத்தில்  நினைத்தவனுக்கு மாலை சூட்டுவாள்)

 பழந்தமிழர் நேரத்தையும் காலத்தையும் எவ்வாறு கணக்கிட்டனர்? - ஞாயிறு.  விண்மீன்.  நிலவு.  கோள்கள்.  மலர்கள் பூக்கும் வேலை ஆகியவற்றைக் கொண்டு

 புகை விரித்தன்ன பொங்கு துகிலுடை ஆம் என்ன அவிர்நூற் கலிங்கம் என்ன பாடல் வரி இடம் பெற்ற நூல் -  புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப்படை   (கலிங்கத்தில் போய் புகை அடுப்பில் பொங்கல் வைக்க வேண்டும் என்றால் ஆவி பறக்காமல் இருக்க பெரியபானையின் வாயின்புறமாக தட்டு வைத்து  மூட வேண்டும்)

 அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு வைத்தால் அலவன் கலவையோடு பெறுகுவீர் என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் -  சிறுபாணாற்றுப்படை (சின்ன மண் பானையில் அரிசி சோறு போட்டு கலந்து சுவைத்தாள்)

 சிறுவாலை விலை என பெருந் தேர் பண்ணி எம் முன் கலைநிதி சென்று சீயோனே என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? -  நற்றிணை (பெரிய தேர் முன்னாடி இருக்கக்கூடிய கடையில சின்ன வளையல் போட்டு பெண்ணை விலை பேசிய நல்ல திணை மகன்)

 இல்லறத்தாரின் தலையாய கடமைகளாக இருந்தன எவை? -   விருந்தோம்பல் சுற்றம் தழுவுதல் வறியோர் துயர் துடைத்தல் (வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு அன்போடு பேசி சோறு போட்டு ஒரு கஷ்டத்தோட வந்தா ஆறுதல் சொல்லணும்)

 இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் ஆசையுடன் இருந்து ஒருவரும் புணர்வு இன்பமென என்று கூறும் நூல் எது? -  நற்றிணை (இசையும் இன்பமும் இருந்துச்சுன்னா நல்ல தினை விளைந்து அனைவருக்கும் கொடுக்கலாம்)

பல் கேள்வி துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் விருது குறித்து எடுத்த உரு கெழு கொடியும் எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? -  பட்டினப்பாலை  (பட்டணத்துக்கு போன பல கேள்விகள் கேட்டு நல்ல ஆசிரியருக்கும் தொல்லை கொடுப்பார்கள்)

பழந்தமிழகத்தில் நகைகள் செய்யப் பயன்பட்ட உலோகங்கள் -  இரும்பு மற்றும் பொன்

 பழந்தமிழகத்தில் நெய்தல் தொழில் மேம்பட்டிருந்தது

 பழந்தமிழகத்தில் யாருடைய பெயர்களில் இலக்கியங்கள் படைக்கப்படும் அளவுக்கு சமூகத்தில் புகழ் பெற்றிருந்தனர்? - பாணர்கள்  மற்றும் இசை கலைஞர்கள்

 பழந்தமிழகத்தில் தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாக காணப்படுகின்றன? -  மீன்பிடித்தொழில்

 பழந்தமிழகத்தில் மிகப் பெரும் தொழிலாக இருந்தது இது? -  உழவுத் தொழில்

 பழந்தமிழகத்தில் இத்தொழில் மேலோங்கி இருந்தது? -  தச்சு தொழில்

 அக்காலத்தில் மன்னர்க்குரிய கூத்து வகை எவ்வாறு அழைக்கப்பட்டது?  -  வேத்தியல்

 பழங்காலத்தில் இந்த கூத்து வகைகள் யாவை? -   வேத்தியல் மற்றும் பொதுவியல்

 நிகழ்வுகளில் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆக அமைந்தவை எவை? -  இலக்கியங்கள்

 இரந்து கேட்பவர்க்கு இல்லை எனது வாரி வழங்கும் செல்வதைப் போன்றது இது ? - மழை

 நிலையான பொருளையும் நிலையில்லாத பொருள் செல்வத்தையும் தேடுவதற்கு உகந்த இடம் இது? -  ஏமாங்கத நாடு

 விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது? - சீவக சிந்தாமணி

 அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயாவில என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் எந்த நாட்டின் வளத்தை கூறுகிறது? - கோக்கோதை நாடு என்னும் சேர நாடு

 ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினார் ? - மோகன் சிங் என்பவரின் தலைமையில்

 ஜப்பானியர்கள் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை இந்தியாவின் இப்பகுதிக்கு ஒற்றை அறிய  அனுப்பினர்? - கேரளா குஜராத்

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...