Monday, February 18

பத்தாம் வகுப்பு தமிழ் கேள்வி-பதில்கள் part 1



பல்துறை வேலைவாய்ப்புகள்





வினையே ஆடவர்க்கு உயிர் என்று கூறும் நூல்
குறுந்தொகை


முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல்
தொல்காப்பியம்


தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் எத்தனை விழுக்காடு ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது?
20 விழுக்காடு


வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் பாடல் வரி எழுதியவர்
கவிஞர் தாராபாரதி


சங்க காலத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லக் கூடாது

நாள்தோறும் கல்வியில் புதுப் புதுத் துறைகள் உண்டாகி கொண்டிருக்கின்றன


உடற்கூறு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வும் நடைபெறும் பணிகள்
காவலர் ராணுவம் ஓட்டுனர் நடத்துனர்


பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி


கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்று கூறியவர்
நாமக்கல் கவிஞர்



நூலகம்



பழங்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்திய பொருட்கள்
கற்பாறைகள்,  களிமண் பலகைகள்,  மரப்பட்டைகள், தோல்கள்,   துணிகள், பனை ஓலைகள்


ஓலைச்சுவடிகளை பூச்சிகள் கரையான்கள் முதலியன அரிக்காமல் இருப்பதற்கு பெட்டிகளில் பாதுகாப்பாக அவற்றுடன் இட்டு வைத்த பொருட்கள்
கல்கண்டு,  வேப்பிலை, துளசி


உலக இலக்கியத் துறையில் நடைபெற்ற மாபெரும் புரட்சி
காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது


மக்களை தத்தம் எண்ணங்களையும் அதனால் விளைந்த அறிவையும் பகிர்ந்து கொள்ள தூண்டியது எது?
கல்வி


நூலகத்தின் பல்வேறு பெயர்கள்
புத்தகச் சாலை, ஏடகம்,  சுவடியகம், சுவடிச்சாலை,   வாசகசாலை, படிப்பகம், பண்டாரம்,  நூல்நிலையம்


நூலகம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்
லைப்ரரி (Library)


புத்தகம் என்னும் பொருள் தரும் லிப்ரா என்னும் சொல் எம்மொழிச் சொல்?
இலத்தீன் மொழிச் சொல்


ஒரு அரசின் தலையாய கடமை எது?
மக்களை அறிவுடையோராக்குதலே


இந்தியாவிலேயே முதன் முறையாக நூலக பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்டது
தமிழக அரசு (1948 ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றி)


இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது
கல்கத்தா தேசிய நூலகம் (10 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன)


அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்பட்ட ஆண்டு
2010ஆம் ஆண்டு (11.5 லட்சம் நூல்கள் உள்ளன;  ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கலாம்)


செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் இயங்கி வரும் இடம்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில்


பாடநூல்களை கொண்ட அறிவை விதைக்கும் களம் எது?
பள்ளி

பள்ளியில் மாணவர் ஒருவரிடம் நூலகங்கள் இடம் என்ற நிலையை மாற்ற பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ள திட்டம்
புத்தக பூங்கொத்து என்னும் வகுப்பறை நூலகத் திட்டம்


நூலக பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கி தந்தவர்
சீர்காழி R. அரங்கநாதன் (இந்திய நூலகத்தின் தந்தை என போற்றப்படுகிறார்)


கிமு 2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்ட இடம்
பாபிலோனியாவில் (நிப்பூர்)


முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்து அரசு
க்ரீஸ் நகர அரசுகளே


ஒரு மனிதன் ஆண்டுக்கு எத்தனை பக்கங்களாவது படித்தால்தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்து மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது?
2000 பக்கங்களாவது




உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன  நூலகம் அமைந்துள்ள இடம்
சென்னை (1970)



கற்றலுக்கு ஏற்ற பருவம்
மாணவப் பருவம்


உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை பல்வேறு பொது அறிவு செய்திகளையும் பெற்று பயனடைய வாய்ப்புகள் நல்குவது
நூலகம்


வீட்டிலிருந்தபடியே நூல்களைப் படிக்க வகைசெய்யும் நூலகங்கள்
மின்னணு நூலகங்கள்


உவமை கூறி பொருளை பெற வைப்பது



பிறிது மொழிதல் அணி

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...