Tuesday, October 2

ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்விபதில்கள்





  1. தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள்
    1. பகுத்தறிவு பகலவன்,  வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம்,  தெற்காசியாவின் சாக்ரடீஸ் , வெண்தாடி வேந்தர்,  சுயமரியாதைச் சுடர், பெண்ணின போர் முரசு, புத்துலக தொலைநோக்காளர்
  2. தானே முயன்று கற்று சுயமாக சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் யார் ? - பெரியார்
  3. பெரியார் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது எது? -  அவருடைய பகுத்தறிவுக் கொள்கை
  4. ஜாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்கிறது.  மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது . அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றவர் யார்? -  தந்தை பெரியார்
  5. மதங்கள் என்பவை எதற்காக ஏற்படுத்தப்பட்டன? -  மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு
  6. கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடித்தவர் யார் ? - தந்தை பெரியார்
  7. சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவியாக பெரியார் எதனைக் கருதினார்? -  கல்வியை
  8. பள்ளிகளில் எதனை கற்றுத் தரக் கூடாது என்று பெரியார் கூறினார்? - அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களும்
  9. பள்ளிகளில் எத்தகைய கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று பெரியார் விரும்பினார்? - சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினை
  10. எதனால் சமுதாயம் விரைவாக முன்னேற்றம் என்று பெரியார் கருதினார் ? - பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால்
    1. மன பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும் மதிப்பெண்களுக்கும் முதன்மை அளிக்கும் முறையையும்  பெரியார் கடுமையாக எதிர்த்தார் .
    2. மொழியோ  நூலோ இலக்கியமோ  எதுவானாலும் மனிதனுக்குமான பகுத்தறிவு வளர்ச்சி நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்
  11. எந்த நூலில் அறிவியல் கருத்துகளும் தத்துவக் கருத்துக்களும்,  அனைவருக்கும் பொதுவான வகையில் இடம்பெற்றிருப்பதால் அது மதிப்புமிக்க நூலாக பெரியார் கருதினார்? - திருக்குறள்
  12. எந்த நூலை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் பெரியார்? - திருக்குறள்
  13. எது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவி ஆகும் என்றார் பெரியார்? - மொழி
  14. நாட்டு விடுதலையை விட பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர் யார்? -  பெரியார்
  15. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பெரியார் கூறினார்? - 50 விழுக்காடு
  16. எப்போது ஈவெராவுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? -  1938 நவம்பர் 13 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில்
  17. தந்தை பெரியாரே தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்னை பாராட்டி பட்டம் வழங்கிச் சிறப்பித்தது யார்? - யுனெஸ்கோ நிறுவனம் (27/6/1970)
  18. பெரியார் தோற்றுவித்த இயக்கம் இது? -  சுயமரியாதை இயக்கம் (1925)
  19. பெரியார் நடத்திய இதழ்கள் யாவை? - குடியரசு,  விடுதலை, உண்மை, ரிவோல்ட் ஆங்கில இதழ்
  20. வாழ்க்கை உறுதி பெற வேண்டுமென்றால் போட்டியிட்டு போரிட்டே ஆக வேண்டும் என்று கூறியவர் யார்? - நா பிச்சமூர்த்தி
  21. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல் வாழ்க்கை தத்துவ உண்மைகளை காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்றவர் யார் ? - வல்லிக்கண்ணன் ( புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலில்)
  22. மரபுக் கவிதையில் யாப்பு பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? -  புதுக்கவிதைகள்
  23. பாரதியாரின் வசனகவிதை தொடர்ந்து புதுக் கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் யார்? -- ந பிச்சமூர்த்தி
  24. புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்? -  பிச்சமூர்த்தி
  25. இலகு கவிதை.  கட்டற்ற கவிதை.  விலங்குகள் இல்லாத கவிதை.  கட்டுக்குள் அடங்காத கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது எது? -  புதுக்கவிதை
  26. ந பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்? - அனுமன்,  மற்றும் நவ இந்தியா
  27. புதுக்கவிதை.   சிறுகதை. ஓரங்க  நாடகங்கள். கட்டுரைகள் என பல இலக்கிய வகைகளை படைத்தவர் யார்? -  பிச்சமூர்த்தி
  28. நா பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது? -  சயன்ஸ்க்கு புலி என்பதாகும்
  29. நா பிச்சமூர்த்தி கலைமகள் பரிசு பெற்ற வருடம் இது? - 1932
  30. நா பிச்சமூர்த்தியின் புனை பெயர்கள் யாவை? - பிஹூ ,  ரேவதி
  31. எந்த ஒன்றும் உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும்’  இல்லையும் வேண்டும் இந்தக் கருத்தைக் கூறும் கவிதையை படைத்தவர் யார்? -  சீனக் கவிஞர் லாவோட்சு
  32. வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது என்ற பொருளை கவிதை இயற்றியவர் யார் ?  - சீனக் கவிஞர் லாவோட்சு
  33. இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது என்று கூறியவர் யார்? - சீனக் கவிஞர் லாவோட்சு  
  34. சீனக் கவிஞர் லாவோட்சு சமகாலத்தவர் யார்? - சீன ஞானி கன்ஃபூஷியஸ்
  35. சீனக் கவிஞர் லாவோட்சு எந்த சிந்தனை பிரிவைச் சார்ந்தவர் ? - தாவோவியம் சிந்தனை பிரிவு
  36. உலகத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் யார்? - சீன ஞானி கன்பூசியஸ்
  37. லாவோட்சு இன்றைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்தார்  இதை வலியுறுத்துவது - தாவோவியம்
  38. படுத்து என் போடுவதற்கு மட்டும் இதில் வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்தவும் உதவுவது எது ? - இலக்கியங்கள்
  39. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? -  யசோதர காவியம்
  40. இதனை போக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது? - வெகுளி
  41. இதனை நோக்க  வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது? - ஞானம்
  42. எதனை காக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகின்றது? - விரதம்
  43. யசோதர காவியம் மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பட்ட நூலாகும்? -  வடமொழியிலிருந்து
  44. யசோதர காவியம் நூலின் ஆசிரியர் யார்? - ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை (சமண முனிவர் என்று கூறுவதுண்டு)
  45. யசோதர காவியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது? -  யசோதரன் எனும் அவந்தி நாட்டு மன்னன் வரலாறு
  46. யசோதர காவியம் பாடல்களின் எண்ணிக்கையைக் கூறுக? - ஐந்து சருக்கம்  320 பாடல்கள் ( அல்லது) 330 பாடல்கள்
  47. பிள்ளை வளர்ப்பில் தாயுமானவர் ஆக அந்த ஒருவர் யார்? - நா முத்துக்குமார்
  48. தம் மக்கள் மெய்தீண்டல் உயிர்க்கு இன்பம் என்று கூறியவர் யார்? -  திருவள்ளுவர்
  49. தீயை படித்து தெரிந்து கொள்வதை விட. கிண்டி கோயம்பேடு அந்த அனுபவம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியவர் யார்? - நா முத்துக்குமார்
  50. எதனால் இன்றைக்கு கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லாமல் போனது? - கைபேசியின் வரவினால்
  51. தாகூர் டிகேசி, வல்லிக்கண்ணன் பேரறிஞர் அண்ணாவும் வரதராசனார் அழகிரிசாமி கீ ராஜநாராயணன் எந்த வடிவில் இலக்கியங்களைப் அளித்துள்ளனர் ? - கடித வடிவில்
  52. இவை முதுகுக்குப் பின்னாலும் என்று கண்களை திறந்து வைக்கின்றன? -  பயணங்களின் ஜன்னல்கள்
  53. மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது? -- யாப்பிலக்கணம்
  54. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? -  மூன்று வகைப்படும் (குறில் நெடில் ஒற்று)
  55. அசை எதனால் ஆனது? -  எழுத்துக்களால் ஆனது
  56. அசை பிரிப்பது எதனை கணக்கிடுவது இல்லை? - ஒற்று எழுத்து
  57. பாடலின் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது எது? - சீர்
  58. இயற்சீர் வஞ்சியுரிச்சீர் என அழைக்கப்படுவது எது? ,-  ஈரசைச் சீர்கள்
  59. வெண்சீர்கள் என்று அழைக்கப்படுவது எது ? - காய்ச்சீர்கள்
  60. இயற்சீர் வெண்சீர் மட்டுமே வரும் பா வகை எது? -  வெண்பா
  61. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் பொருந்துவது எவ்வாறு அழைக்கப்படும்? - தளை
  62. பொருத்துக  (தமிழரின் தன்னேரிலாத பண்புகள்)
      • அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை -  இல்லறம் உண்பது நாழி உடுப்பவை இரண்டே  - எளிய வாழ்க்கைசெல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர்பார்த்த  - உயர் பண்புகொள்வதுமே வளாக கொடுப்பதும் குறைவுபடாது - கொள்கை சிறப்பு களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே  - வீரம் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு -  தூய அன்புயாதும் ஊரே யாவரும் கேளீர் -  உலகப் பொதுமை
  63. வெற்றியைக் கொண்டாட தமிழர் வணங்கிய தெய்வம் எது? -  கொற்றவை என்ற பெண் தெய்வம் 
  64. எதனை உணர்த்த நடுகல் வழிபாடு செய்வது வழக்கத்தில் இருந்தது? - வீரத்தை உணர்த்த 
  65. நல்லமர் கடந்த நாணுடை மறவர் என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? -- அகநானூறு (67)
    1. அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது? -  அகநானூறு
    2. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? -  தொல்காப்பியம் (புறத்திணை)
    3. பழங்காலத்தில் மேற்சட்டையை எவ்வாறு அழைத்தனர்? -  கஞ்சுகம்
    4. பழங்காலத்தில் துணிதைப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? - துன்னக்காரர்
    5. பழங்காலத்தில் ஐம்படைத் தாலி என்னும் கழுத்தணி அணிந்தவர்கள் யார்? - சிறுவர்கள்
    6. புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ  ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்கள் யாவை ? -  புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப்படை
    7. சிறந்த வீர விளையாட்டுகளில் ஒன்று - ஏறு தழுவுதல் மற்றும் மற்போரிடல்
    8. இங்கு வாழ்ந்த மக்கள் மேடை அமைத்து இசை நாட்டியம் நாடகம் ஆகியவற்றை காண்பதே பொழுது போக்காகக் கொண்டிருந்தார்? - நகர்ப்புற மக்கள்
    9. அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு கலவையோடு பெறுகுவீர் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ? - சிறுபாணாற்றுப்படை
    10. இல்லறத்தாரின் தலையாய கடமைகள் என்ன? - விருந்தோம்பல் சுற்றம் தழுவல் வரியோர் துயர் துடைத்தல்
    11. இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் என்ன பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? -  நற்றிணை
    12. முதுநாரை முதுகுருகு பெருநாரை பெருங்குருகு பஞ்சபாரதீயம் இசை நுணுக்கம் பஞ்சமரபு என்பவை எவ்வகை நூல்கள்? - இசை நூல்கள்
    13. பல்கேள்வித் துறை போகிய  தொல்லாணை நல்லாசிரியர் சின்ன பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? - பட்டினப்பாலை






ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...