Friday, September 28

ஒன்பதாம் வகுப்பு கேள்வி பதில்கள்





உரைநடை



  1. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் -  டாக்டர் முத்துலட்சுமி
  2. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் -  டாக்டர் முத்துலட்சுமி
  3. சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி -   டாக்டர் முத்துலட்சுமி
  4. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் -  டாக்டர் முத்துலட்சுமி  
  5. அடையாறில் அவ்வை இல்லம் துவங்கப்பட்ட ஆண்டு - 1930
  6. சென்னை அடையாறு புற்றுநோய் மையம் துவங்கப்பட்ட ஆண்டு  - 1952
  7. பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ -  பாரதிதாசன்
  8. முதன்முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு - (1882) ஹண்டர் குழு
  9. முதன் முதலாக பெண்களுக்கான பள்ளி திறக்கப்பட்ட மாநிலம் - மராட்டிய மாநிலம்
  10. முதன்முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள் - ஜோதிராவ் பூலே சாவித்திரிபாய் பூலே
  11. மூவலூர் ராமாமிருதம் அம்மையார் திருமண உதவித் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது - எட்டாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு
  12. பெண்கள் மருத்துவராதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவ படித்துமுடித்து வேலூரில் வந்து இலவச மருத்துவ சேவை செய்தவர் - ஐ டாஸ் சோபியா கட்டர் (1870-1960)
  13. முதன் முதலில் பெண்களுக்கான பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு - 1848
  14. நாட்டின் முதல் பெண் பள்ளி ஆசிரியர் - ஜோதிபாய் பூலே
  15. 2014 ல் நோபல் பரிசு பெற்றவர் -  கைலாஷ் சத்யார்த்தி
  16. கைலாஷ் சத்யார்த்தி இதுவரை எத்தனை குழந்தைகள் கல்வி பெற உதவினார்  - 80 ஆயிரம் குழந்தைகள்
  17. பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி அதற்காக போராடி நோபல் பரிசு பெற்ற சிறுமி -  யூசுப் மலாலா (பாகிஸ்தானில் பெண் கல்வியை வேண்டுமென அவர் போராடத் தொடங்கிய போது (1997) வயது 12)
  18. பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்
    1. ஈவேரா நாகம்மை கல்வி உதவித் திட்டம் - பட்டமேற்படிப்பு
    2. சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம் -  திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகை தொடர்பானது
    3. தனது பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்த குழு -  கோத்தாரிக் கல்விக் குழு (1964)
  19. சாரதா சட்டம் என்பது - குழந்தை திருமண தடைச் சட்டம் (1929)
  20. திருமந்திரம் தொல்காப்பியம் கைவல்யம் போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவாற்றியவர் -  ஈ. த. ராஜேஸ்வரி அம்மையார்
  21. எதன் வருகைக்குப்பின் தந்தியின் பயன்பாடு குறைந்தது - குறுஞ்செய்தி
  22. மனிதனின் பயண நேரம் எதனால் குறைந்துள்ளது -  அறிவியல் முன்னேற்றத்தால்
  23. ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - செஸ்டர் கார்ல்சன் (நியூயார்க்) - (சட்ட வல்லுனரும் பகுதிநேர ஆய்வாளரும் )
  24. உலகின் முதல் ஜெராக்ஸ் (ஒளிப்படி) எடுக்கப்பட்ட ஆண்டு - 1938
  25. உலகின் முதல் ஜெராக்ஸ் (ஒளிப்படி) எதனைக் கொண்டு எடுக்கப்பட்டது? -  கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு
  26. சீரோ கிராபி என்பது எந்த மொழிச்சொல் - கிரேக்க மொழி
  27. சீரோ கிராபி என்பதன் பொருள் - உலர் எழுத்துமுறை
  28. ஜெராக்ஸ் இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -- 1959
  29. ஒளிபடங்களையும் கோப்புகளையும் உடனடியாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப பயன்படுவது - தொலைநகல்
  30. குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு (fax) அதற்குரிய காப்புரிமையை பெற்றவர் (தொலைநகல்)  - அலெக்சாண்டர் பெயின் (ஸ்காட்லாந்து - 1846)
  31. இப்போது நாட்டு இயற்பியல் அறிஞர் ஜியோவான்னி காசில்லி உருவாக்கிய தொலைநகல் கருவியின் பெயர் -  பான்டெலிகிராப்
  32. ஜியோவான்னி காசில்லி - கண்டுபிடிப்பை கொண்டு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட இடம் -  பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு (1865)
  33. தொலைநகல் சேவை கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது ? - 11 ஆண்டுகளுக்கு பின்பு
  34. கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் - ஹாங்க் மாக்னஸ்கி  (அமெரிக்கா - 1985)
  35. ஹாங்க் மாக்னஸ்கி தனது தொலை நகல் எடுக்கும் கருவியை எப்பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தார்? -  காமா பேக்ஸ்
  36. தானியக்க பண இயந்திரமான ஏடிஎம் ஐ கண்டுபிடித்தவர் - ஜான் ஷெப்பர்டு பாரன் தலைமையிலான குழு
  37. ATM இயந்திரம் எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? -  1967 June 27 (பார்க்லேஸ் வங்கிக்காக லண்டனில்)
  38. ஏடிஎம் இயந்திரம் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது - சாக்லேட்டை வெளித்தள்ளும் இயந்திரம்
  39. முதன்முதலில் ஏடிஎம் இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட  அட்டை - வங்கியில் வழங்கப்பட்ட காசோலை (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்)
  40. அட்டை பயன்படுத்தும் இயந்திரம் - கட்டணம் செலுத்தும் கருவி  விற்பனை கருவி
  41. ஏடிஎம் அட்டை யை கண்டுபிடித்தவர் - ஆட்ரியன்  ஆஷ்பீல்டு (1962)
  42. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளன? - திறன் அட்டைகளாக
  43. வருகைப் பதிவு மற்றும் வேளியேறுகைபதிவுகாகவும் பயன்படுத்தப்படும் கருவி - ஆளரி சோதனைக் கருவி
  44. இணைய   வணிகத்தை கண்டுபிடித்தவர் - மைக்கேல் ஆல்ட்ரிச்  (1979 - இங்கிலாந்து)
  45. இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்ட இடம் - (1989) அமெரிக்காவில்
  46. வையக விரிவு வலை வழங்கியை (server) உருவாக்கியவர் -  (1990) டிம் பெர்னெர்ஸ் லீ
  47. இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை -  டிம் பெர்னெர்ஸ் லீ (புகழ்பெற்ற வாசகம்)
  48. இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த வருடம் - 1991
  49. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு - தேசிய திறனாய்வு தேர்வு
  50. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு - தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு
  51. கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு - ஊரக திறனாய்வு தேர்வு
  52. எவை  இன்றி உலகம் இயங்குவது இல்லை - இயந்திரங்களும் கணினிகளும்
  53. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தபடுபவை  - மாடுகள்
  54. முல்லை மற்றும் மருத நிலங்களில் கால்கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடு ஆகியுள்ளது -  ஏறு தழுவுதல்
  55. தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு - ஏறு தழுவுதல்
  56. இளைஞர்களின் வீரத்தை பெருமிதப்படுத்தும் பண்பாட்டு  நிகழ்வு - ஏறு தழுவுதல்
  57. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சங்க இலக்கியம் -  கலித்தொகை
  58. முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் நிகழ்வு  - ஏறு தழுவுதல்
  59. எழுந்தது துகள்,  ஏற்றனர் மார்பு. கவிழ்ந்தன மருப்பு.  கலங்கினர் பலர் - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல் - முல்லைக்கலி (கலித்தொகை)
  60. ஏறுதழுவுதல் களம் குறித்து அடிகள்,  காட்சியை கண் முன்னே நிறுத்துவதும்,  காளைகளின் பாய்ச்சல் பற்றியும் கூறும் நூல் -  கலித்தொகை
  61. மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருதநிலத்து போர்வீரர்களை நிகர்த்தனவாக  இருந்தது - காளைகள்
  62. நீறு எடுப்பவை நிலம் சாடுபவை - பாடல் வரி இடம்பெற்ற நூல் கலித்தொகை
  63. கலித்தொகை தவிர சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும்  - ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது
  64. ஏறு தழுவுதல் பற்றி பிற்காலச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான எந்த இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன  - பள்ளு இலக்கியம்
  65. ----------------என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை கண்ணுடையம்மன்  பள்ளு பதிவு செய்துள்ளது - எருதுகட்டி
  66. காளைப்போர்  குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ள இடங்கள் -  பெனி - ஹாசன் (எகிப்து) சித்திரங்களிலும்; (கிரீட் தீவு) கினோஸஸ் -அரண்மனை சித்திரங்களிலும்
  67. எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார்  கல் உள்ள இடம் - சேலம் மாவட்டம் (கோவூரிச்சங்கன் கருவந்துறை)
  68. கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி  விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் உள்ள இடம் - (நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே)  கரிக்கையூர்
  69. திமிலுடன் கூடிய   காளை ஒன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் உள்ள இடம்  - கல்லூத்து மேட்டுப்பட்டி (மதுரை உசிலம்பட்டி அருகே)
  70. திமிலுடன் கூடிய  காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ள இடம் - சித்திரக்கல் புடவில்   (தேனி மயிலாடும்பாறை அருகே)
  71. சிந்துவெளி நாகரிகம் வரலாற்றிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது - காளை
  72. சிந்துவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட மாடு தழுவும்  கல் முத்திரையொன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமாக ஏறு தழுவுதலை குறிப்பதாக தெரிவித்துள்ளவர் - ஐராவதம் மகாதேவன்
  73. ஏறு தழுவுதல் என்பது
    1. முல்லை நிலத்து மக்களின் அடையாளம்
    2. மருத நிலத்து வேளாண்குடிகளின் தொழில் உற்பத்தி
    3. பாலை நில மக்களின் போக்குவரத்து தொழில்
  74. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி  அடைந்துள்ளது - ஏறு தழுவுதல்
  75. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளைமாடுகள் -  ஏர் மாடுகள் எருதுகள் ஏறுகள்
  76. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற -  வளையத்தினைக் குறிக்கும்
  77. எதனால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது? -  புளியங்கொம்பினால்
  78. மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் உள்ளது  - மேலைநாடுகளில் நடத்தப்படும் காளை விளையாட்டு
  79. இந்திய நீர் பாசனத்தின் தந்தை -  சர் ஆர்தர் காட்டன் ( பொறியாளர்)
  80. 1829 காவிரிப் பாசனப் பகுதிக்கு தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர் -  சர் ஆர்தர் காட்டன்
  81. சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு சூட்டிய புதிய பெயர் -  கிராண்ட் அணைக்கட்டு
  82. சர் ஆர்தர் காட்டன் 1873 ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தவ்ளீஸ்வரம்  அணையை கட்ட பயன்படுத்திய கட்டுமான உத்தி எது? - கல்லணையின் கட்டுமான உத்தி  
  83. ஒரு நாட்டின் வளர்ச்சிப் போக்கை நெறிப்படுத்துவதே -  நீர் மேலாண்மை தான்
  84. தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதியில் உள்ளது
  85. ----------------------------ல்  நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன் - தமிழ் மரபில்
  86. சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலை குளிர வைத்தல் - குளிர்த்தல்
  87. குளிர்த்தல் என்பது குளித்தல் என ஆயிற்று  என விளக்குபவர் - தொ. பரமசிவன்
  88. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்பவர்  - ஆண்டாள்
  89. தெய்வச் சிலைகளை குளிர்க்க வைப்பதை என்னவென்று கூறுவர்? திருமஞ்சனமாடல்
  90. நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உள்ள இலக்கியம் -  சிற்றிலக்கியம் ஆகிய பிள்ளைத்தமிழ்
  91. நீராடுதல் சம்பந்தமான நிகழ்வுகள்
    1. திருமணமான பின்  - கடலாடுதல்
    2. இறப்புச் சடங்கில் -  நீர் மாலை எடுத்து வருதல்
    3. அம்மை - தலைக்கு தண்ணீர் ஊற்றுதல்
  92. மாதம் தோறும் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது தமிழர்கள் மரபாகவே கொண்டாடிய நாட்கள் - சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
  93. சனி நீராடு என்பது யாருடைய வாக்கு? - அவ்வையின் வாக்கு
  94. நிலத்தடி நீர்வளம் குறைந்த காணப்படும் நாடுகள் -  இந்தியா பாகிஸ்தான் அமெரிக்கா சீனா
  95. இம்மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே 700 அடி வரை ஆழ்குழாய்கள் இறக்கியும் நீர் கிடைக்கவில்லை -  ராஜஸ்தான் மாநிலத்தில்
  96. பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் -  இலஞ்சி
  97. தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை -  சிறை
  98. குளிப்பதற்கு ஏற்ற சிறுகுளம் - குண்டு
  99. சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை -  குண்டம்
  100. பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் -  கண்மாய்
  101. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை -  கூவல்
  102. சரளை  நிலத்தில் தோண்டி கல் செங்கற்களால்   அகச்சுவர் கட்டிய கிணறு - கட்டு கிணறு
  103. தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய வற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் -  ஜான் பென்னிகுவிக்
  104. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் எந்த ஆற்றின் வழியாக கடலில் கலந்தது?  பெரியாற்றின் வழியாக















ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...