- ஆரம்ப காலத்தில் இந்தியாவில் சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நீதி வழங்குதல் ஆகியவற்றின் தலைமையிடமாக இருந்தவர் யார்? மன்னர்
- துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அவசியமான ஓன்று எது? வலிமையான அரசியல் கட்சி முறை (கட்சி முறை என்பது நவீன கால தோன்றல்)
- எவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பாகும்? அரசியல் கட்சி
- அரசியல் கட்சியின் முக்கியமான மூன்று கூறுகள் எவை?
- தலைவர்
- செயல் உறுப்பினர்
- தொண்டர்கள்
- மக்களாட்சியின் முதுகெலும்பு எனப்படுபவை எவை? அரசியல் கட்சிகள்
- எவை முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன? அரசியல் கட்சிகள்
- எவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன? அரசியல் கட்சிகள்
- அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற தேவையானவை :
- 5 ஆண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்
- வேட்பாளர்கள் 6% ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும்
- கட்சி முறைகளின் வகைகள் எத்தனை? மூன்று
- ஒரு கட்சி முறை (சீனா, கியூபா, வடகொரியா)
- இரு கட்சி முறை (பிரிட்டன், அமெரிக்கா)
- பல கட்சி முறை (இந்தியா, பிரான்ஸ், சுவீடன், நார்வே)
- இந்தியாவில் கட்சிமுறை எப்போது தோன்றியது? 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
- உலகில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் காணப்படும் நாடு எது? இந்தியா
- இந்தியாவில் அரசியல் கட்சிகள் எத்தனை படிநிலைகளில் அமைந்துள்ளன? 3 படிநிலைகளில்
- தேசிய கட்சிகள்
- மாநில கட்சிகள்
- சுயேட்சைகள்
- பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? சுயேட்சைகள்
- தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு எது? இந்திய தேர்தல் ஆணையம்
1968-தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி தேர்தல் சின்னங்கள் எத்தனை வகையாகும்? இரண்டு வகை
ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள்
ஒதுக்கப்படாத தேர்தல் சின்னங்கள்
பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சிகள் தாங்கள் விரும்பும் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட - முடியாது
ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிக்க வழிமுறைகள்
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல்
குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் வாக்காளர் அட்டை வைத்திருத்தல்
கட்சி அமைப்பு குறித்த ஆவணம் கொண்டிருத்தல்
மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு மிகவும் அவசியமானது எது? ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி
ஆளும் கட்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது எது? எதிர்க்கட்சி
ஆளும் கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எது? எதிர்க்கட்சி
எதிர்க்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்தைப் பெறுகிறார்? காபினெட் அமைச்சர் அந்தஸ்தைப் பெறுகிறார்
எந்த சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது? விலங்குகளின் சின்னங்களை (விதிவிலக்கு யானை மற்றும் சிங்கம்)
எந்த இரு இந்திய மாநில கட்சிகள் ஒரே தேர்தல் சின்னத்தை பயன்படுத்துகின்றன? வில் அம்பு சின்னம் (மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோட்சா)
தேசிய கட்சி அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் வலிமை உடைய கட்சியாக அது இருக்க வேண்டும்? 4 மாநிலங்களில்
இந்தியத் தேர்தல் முறை எந்த நாட்டில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினை பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது? இங்கிலாந்து
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இந்திய தேர்தல் முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? பகுதி XV
இந்திய அரசியலமைப்பில் இந்திய நாட்டின் தேர்தல் முறை பற்றி குறிப்பிடும் பிரிவுகள் எவை? 324 முதல் 329 வரை
நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு வழிவகை செய்கிறது? 324 பிரிவு
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவராக இருப்பவர் யார்? பிரதமர்
இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் இது? ஜனவரி 25
NOTA என்பதன் பொருள் என்ன? None of The Above (மேற்கண்ட யாரும் இல்லை )
NOTA பற்றி விவரிக்கும் சட்ட விதி எது? (1961 ஆண்டு சட்டம்) விதி 49-O
ஒருவர் தாம் செலுத்தியவாக்கு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பை எந்த ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது? 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில்
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் வகைகள் எத்தனை? 2 வகை
நேரடித் தேர்தல் மற்றும்
மறைமுக தேர்தல்
2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் எத்தனை? 7
மக்களின் கருத்துக்கு வடிவம் கொடுப்பவை எவை? அரசியல் கட்சிகள்
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுபவை எவை? அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்
மக்களாட்சி முறையிலான அனைத்து அரசாங்க அமைப்புகளிலும் முக்கிய பங்கு வகிப்பவர் யார்? எதிர்க்கட்சித் தலைவர்
பொது கணக்கு குழுவின் தலைவராக செயல்படுபவர் யார்? எதிர்க்கட்சித் தலைவர் (Note: மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதிலும் எதிர்க்கட்சித் தலைவர் முக்கிய பங்கு வகிக்கிறார்)
அழுத்த குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது? அமெரிக்க நாட்டில்
பொது நலன்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு எவ்வாறு அழைக்கப்படுகிறது? அழுத்த குழு (நல குழுக்கள் அல்லது தனிப்பட்ட நல குழுக்கள்)
அரசியலின் மற்றொரு முகம் என்று கூறப்படுவது எது? அழுத்த குழுக்கள்