Monday, September 17

வானிலை மற்றும் காலநிலை


 

  1. நம்முடைய வாழ்வின் நடைமுறைகள் அனைத்தும் எதனை அடிப்படையாகக் கொண்டு தான் அமைகின்றன? - வானிலையை அடிப்படையாக
  2.  உலகில் எந்த ஒரு பகுதியில் வசிக்கும் மனிதனின் நடவடிக்கைகள் அனைத்தும் எதனை அடிப்படையாகக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது? - காலநிலையினால் தீர்மானிக்கப்படுகிறது
  3. ஒரு குறிப்பிட்ட இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் வளிமண்டலத்தின் நிலை என்ன எனப்படுகிறது? - வானிலை
  4. ஒவ்வொரு அட்ச ரேகைக்கும் வேறுபடுவது எது? -  வானிலை
  5. ஒரு நீண்ட காலத்தில் மற்றும் ஒரு பெரும் பரப்பளவில் காணப்படும் வானிலையின் சராசரி எது? -  காலநிலை
  6. ஒரு திட்டமான சராசரி காலம் என்பது எவ்வளவு ஆண்டுகள் ? – 30 (Or) 35 ஆண்டுகள்
  7. காலநிலை என்ற சொல் எந்த  சொல்லிலிருந்து பெறப்பட்டது? -   கிளைமா  என்ற கிரேக்கச் சொல்
  8. கிளைமா  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் யாது ? - ஒழுங்லிருந்து விலகுதல்
  9.  இப்பகுதிகளில் குறைந்த ஈரப்பதம் நிறைந்த காற்று ஆண்டு முழுவதும் வீசுவதால்  கோடை மற்றும் குளிர் காலங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை மாற்றி அமைக்கின்றன?  - கடற்கரையோர பகுதிகளில்
  10. கடற்கரையோரம் நிலவும் காலநிலை எவ்வகை காலநிலை என அழைக்கப்படுகின்றது?  - சீரான காலநிலை அல்லது  கடலாதிக்க காலநிலை
  11. கோடையில் வெப்பம் கடுமையாகவும் மற்றும் குளிர்காலத்தில் குளிர் கடுமையாகவும் நிலவும் காலநிலை  எவ்வகை காலநிலை எனப்படும் ? - தீவிர காலநிலை அல்லது கண்ட காலநிலை
  12. கடற்கரை பகுதிகளை மிக வெப்பத்துடனும் மற்றும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு கடலில் பனிப்பாறைகள் உருவாகாமல் தடுப்பது எது? -  வெப்ப நீரோட்டம்
  13. வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் சந்திக்கின்ற இடங்கள் முதன்மையான மீன்பிடி தலைவராக இருப்பதற்கு காரணம் என்ன? -  கடல்வாழ் நுண்ணுயிரி வளர்வதற்கேற்ற  சூழ்நிலை நிலவுவதால்
  14. எல்நினோ என்பது எந்த மொழி சொல்? - ஸ்பானிய மொழி சொல்
  15.  எல்நினோ என்பதன் பொருள் என்ன? -  குழந்தை இயேசு
  16. எல்நினோ தோன்றும் காலம் எது? -  கிறிஸ்துமஸ் காலங்களில் தோன்றி சில மாதங்கள் நீடிக்கும்
  17.  பருவக்காற்று பொய்த்தலுக்கு முக்கியமான காரணியாக விளங்குவது எது? - எல்நினோ
  18. ஒரு பெரிய நகரமானது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டிலும் அதிக வெப்பத்துடன் இருப்பதன் பெயர் என்ன? - நகர வெப்ப தீவு
  19. புவி கதிர்வீசல் என்பது என்ன? - புவி வெளியிடும் வெப்ப ஆற்றல்
  20. சூரியனிடமிருந்து வரும் சூரிய கதிர் வீசலின் பெயர் என்ன? -  வெப்பம்
  21. சூரிய ஒளி பூமியின் மேற்பரப்பை வந்தடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு? - எட்டு நிமிடம்
  22. ஒரே நாளில் நிலவும் அதிக அளவு மற்றும் குறைந்த அளவு வெப்பநிலை இடையே உள்ள வெப்பநிலை வேறுபாடு என்னவென்று அழைக்கப்படும்? - நாள் வெப்ப பரவல்
  23. புவியின் வளிமண்டலம்  சூரிய   கதிர்வீசலைவிட எதனால் அதிக வெப்பமடைகிறது? -  புவி கதிர்வீசலால்
  24. ஒரு வருடத்தில் நிலவும் வெப்பமான மாதத்திற்கும்  குளிரான மாதத்திற்கும் இடையே நிலவும் வேறுபாடு என்னவென்று அழைக்கப்படும்? - ஆண்டு வெப்ப பரவல்
  25. புவியின் வளிமண்டலம் ஆனது எதனால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது? -  புவி ஈர்ப்பு விசையினால்
  26. வானிலை மாற்றத்திற்கு காரணமாக அமைவது எது ? - வளிமண்டலம்
  27. எதற்கு ஏற்ப வாயுக்களின் அளவானது வேறுபடுகின்றது? - வளிமண்டலத்தின் உயரத்திற்கு  
  28. வளிமண்டலமானது எதன் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது? - அதன் பண்புகளின் அடிப்படையில்
  29. பூமியின் அடி அடுக்கு எது வரை பரவிக் காணப்படுகிறது? -  துருவப் பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் ( பூமத்திய ரேகை பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர்)
  30. உயரம் அதிகரிப்பதற்கு ஏற்ற வெப்பநிலை குறைவது  எந்த அடுக்கில் நடைபெறும்?  - அடி அடுக்கில் மட்டும்
  31. வானிலை மாற்றங்கள் அனைத்தும் நடைபெறுவது எந்த அடுக்கில்? - அடி அடுக்கில்
  32. வளிமண்டலத்தை பற்றி படிக்கும் அறிவியல் பெயர் என்ன? -  வானிலையியல்
  33. புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் வரை பரவிக் காணப்படும் அடுக்கு எது? - படைஅடுக்கு
  34. ஜெட் விமானங்கள் எந்த அடுக்கில் பயணிக்கின்றன? - Troposphere is between 23,000 and 65,000 feet
  35. எந்த அடுக்கின் உச்சி விளிம்பில் ஓசோன் வாயுவை அதிக அளவில் காணப்படுகிறது? - படைஅடுக்கு
  36. படைஅடுக்கு மற்றும் அடி அடுக்கு இடையில் காணப்படும் மெல்லிய அடுக்கு எது? -  சேணிடை அடுக்கு
  37. சூரியனிடமிருந்து வரும் வடிகட்டப் படாத கதிர்களால் உயிரினங்களின் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படும்? - திசுக்கள்
  38. சம வெப்ப அடுக்கு மற்றும் ஓசோன் அடுக்கு என அழைக்கப்படுவது எது?  - படைஅடுக்கு
  39. படைஅடுக்கு அதனைத் தொடர்ந்து காணப்படும் மெல்லிய அடுக்கு எது? -  மீவளி இடையடுக்கு
  40. புவியின் மேற்பரப்பில் இருந்து 80 கிலோ மீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை பரவிக் காணப்படுகிற அடுக்கு எது? -  அயனி அடுக்கு
  41. சூரியக் கதிர்கள் மின் செலுத்தப்படும் அடுக்கு எது? -  அயனி அடுக்கு
  42. வானொலி அலைகளை பூமிக்கு திருப்பி அனுப்புவதால் நவீன தொலைத்தொடர்புக்கு மிகவும் உதவும் வளிமண்டல அடுக்கு எது ? - அயனி அடுக்கு
  43. ஒருதிறப்பொன் என்று அழைக்கப்படும் வண்ணமயமான காட்சி அமைப்பு காணப்படும் வளிமண்டல அடுக்கு  எது? -  அயனி அடுக்கு
  44. வானிலை இயலின் ஒரு பிரிவு எது? -   கதிர்வீசல் இயல்
  45. வளிமண்டலத்தினை பலூன்கள் வானொலிகள் மற்றும் செயற்கை கோள்களை பயன்படுத்தி ஆராய்வது  எந்த பிரிவு? -  கதிர்வீசல் இயல்
  46. வளிமண்டலத்தின் மேல் அடுக்கினை பற்றி படிக்கும் படிப்பு எது? - கதிர்வீசல் இயல்
  47. வளி மண்டலத்தின் மிக உயரமான அடுக்கு எது? -  வெளி அடுக்கு
  48. பெருமளவு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் கொண்டுள்ள அடுக்கு எது? -  வெளி அடுக்கு (எக்ஸோஸ்பியர்)
  49. அண்டவெளியின் புறப்பகுதி என  கருதப்படுவது எது? - எக்ஸோஸ்பியர் (வெளி அடுக்கு)
  50. புவியின் வெப்ப நிலையானது அதன் அட்சரேகை அளவு உயர்வதற்கு ஏற்ப வெப்பநிலையின் அளவு குறையும்
  51. புவி அது எதன் அடிப்படையில் வெப்ப மண்டலங்கள் மித வெப்ப மண்டலங்கள் மற்றும் குளிர் மண்டலங்கள் என பிரிக்கப்படுகிறது? -  அட்சரேகை அளவை வைத்து
  52. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன? - தெர்மாமீட்டர் அல்லது வெப்பமானி
  53.  வரைபடத்தில் ஒரே அளவுடைய வெப்பநிலையை கொண்டிருக்கும் இடங்களை இணைக்கும் கற்பனை கோட்டின் பெயர் என்ன? -  சம வெப்பகோடுகள்
  54. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி எது? -  வெப்ப மண்டலப் பகுதி

 வானிலை மற்றும் காலநிலை

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...