Monday, September 17

புவியியல் மண் வகைகள்

புவியியல்
மண் வகைகள்
தக்காணப் பீடபூமி
  • எரிமலை பாறைகள் சிதைந்து தக்காணப் பீடபூமி மண் உருவானது
  • அதிகமாக தக்காண பீடபூமியில் காணப்படும் மண் கரிசல் மண் ஆகும்.




கரிசல் மண்ணின்  பண்புகள்:

  • நீரை விரைவில் உறிஞ்சாது, ஆனால் உறிஞ்சிய நீரை வெகுநாட்கள் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
  • ஈரமாகஇருக்கும் போது ஒட்டிக்கொள்ளும் தன்மையுடனும்
  • காய்ந்த பின் வெடிக்கும் தன்மையுடனும் காணப்படும்

எனவே இதனால் தன்னைத் தானே உழவு செய்து கொள்ளும் மண் என கரிசல் மண் அழைக்கப்படுகிறது .

கரிசல் மண்ணில் காணப்படும் சத்துக்கள்:

நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போதுமான அளவு இல்லை
பொட்டாசியம் சத்து மட்டுமே உண்டு.

கரிசல் மண்ணில் விளையும் பயிர்கள்:

பருத்தி,
கோதுமை
புகையிலை
எண்ணெய்வித்துக்கள்
கடுகு

கரிசல் மண் கருப்பாக காணப்பட காரணம் :

கரிசல் மண்ணில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் அலுமினியம் ஆகியவையாகும்

குறிப்பு : (பத்தாம் வகுப்பு)
கரிசல் மண் கருப்பு நிறம் முதல் பழுப்பு நிறம் வரை காணப்படுகிறது

தக்காண பீடபூமியில் அதிகம் காணப்படும் மண் கரிசல் மண் ஆகும்

செம்மண்

  • தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் மண் வகை செம்மண்
  • தீபகற்ப இந்தியா அல்லது தென்னிந்தியாவில் அதிகம் காணப்படும் மண் வகை செம்மண் வகை

குறிப்பு:
  • இந்தியாவில் அதிகம் காணப்படும் மண் - வண்டல் மண்
  • தக்காண பீடபூமியில் அதிகம் காணப்படும் மண் - கரிசல் மண்

செம்மண்ணின் தோற்றம் :

  • பழங்கால படிக பாதைகளும் உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவான மண்
  • அதிக வெப்பமும் குறைந்த மழைப்பொழிவும் உள்ள பகுதியில் உருவாகும்

செம்மண்ணின் பண்புகள் :
  • ஈரப்பதத்தை தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் குறைவு
  • காரணம் : நுண்துகள்கள் அதிகம் உள்ளன

செம்மண் சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் - இரும்பு ஆக்சைடு

செம்மண்ணில் காணப்படும் சத்துக்கள் :

 நைட்ரஜன் சத்து இல்லை
 பாஸ்பரஸ் சத்துக்கள் இல்லை

பொட்டாசியம் உண்டு

குறிப்பு:
  • கரிசல் மண்ணிலும் மட்டுமே நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் ஆகிய மூன்று சத்துக்களும் உண்டு

  • மற்ற  அனைத்து மண் வகைகளிலும் பொட்டாசியம் சத்து மட்டுமே உண்டு

செம்மண்ணில் விளையும் பயிர் வகைகள் :

பருப்பு வகைகள்
கோதுமை
நெல்
பருத்தி
நிலக்கடலை
NOTE:
செம்மண் தீபகற்ப இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டில் உள்ளது

தமிழ்நாட்டில் செம்மண் அதிகம் பகுதிகள்:

சிவகங்கை, ராமநாதபுரம் ( இதில் அமிலத்தன்மையும் அதிகம்)

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...