Monday, September 21

தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர்கள் மற்றும் மனிதனால் உருவாகும் பேரிடர்கள்


  1. உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பேரிடர்

  2. எந்த செயல்பாடுகளினால் இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு பூமி முழுவதும் பேரழிவுகள் அதிகம் ஏற்படுகின்றன?  தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள்

  3. அபாய குறைப்பு என்பது பேரிடர்க்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களை குறைப்பதாகும் என்பது யாருடைய கூற்று?  ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின் (UNDRR)  கூற்று 

  4. பேரிடர் குறைப்பு எவற்றை உள்ளடக்கியது ?

    1. இடர் உண்டாகும் இடங்களை தவிர்த்தல்

    2. மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதிப்பினை குறைப்பது

    3.  நில மேலாண்மை

    4.  சூழ்நிலை மேலாண்மை

    5.  எதிர் விளைவுகள் குறித்த தயார்நிலை

    6.  எச்சரிக்கை 

  5. மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து விழுதல் எவ்வகை பேரிடர்? நிலச்சரிவு 

  6. நிலச் சரிவுக்கான ஒரு முக்கிய காரணியாக திகழ்வது இது?  நீர் 

  7. தமிழ்நாட்டில் எப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது?  நீலகிரி மலைப்பகுதி 

  8. தமிழ்நாட்டில் நிலச்சரிவு உள்ளாகும் பகுதிகள் சில

    1.  கோயம்புத்தூர்

    2.  திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை (கொடைக்கானல்)

  9. எவ்வகை பேரிடர் நிகழ்ந்தப் பகுதிகள் நிகழ்வுக்குப் பின்னரும் சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை தாக்கத்திற்கு உள்ளாகும்? நிலச்சரிவு 

  10. எந்த பேரிடர் நிகழ்வுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது?  நிலச்சரிவுக்கு பிறகு 

  11. தமிழ்நாட்டில் எந்த காலங்களில் வெள்ளப் பெருக்கு என்பது பொதுவாக காணப்படும் ஒரு நிகழ்வாகும்?  வடகிழக்குப் பருவக்காற்று காலங்களில் 

  12. வடகிழக்குப் பருவக்காற்றின் மிக அதிக மழைப் பொழிவின் காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட தென்னிந்திய வெள்ளப்பெருக்கு எது?  2015 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எப்போது

    1. NOTE: தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் சோழமண்டல கடற்கரை ஆகியவற்றை அதிகம் பாதித்தது 

      1. 500  இறப்பு 

      2. 1.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு 

      3. 200 பில்லியன் ரூபாய் அளவிற்கு பொருள் இழப்பு 

  13. 2015 ஆம் ஆண்டின் வெள்ளப்பெருக்கு மிக அதிக சேதத்தை ஏற்படுத்திய இயற்கை பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?  தமிழ்நாடு 

  14. தமிழ்நாட்டில் அதிகம் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்கள் எவை?

    1.  காஞ்சிபுரம்

    2.  திருவள்ளூர்

    3.  கடலூர்

    4.  விழுப்புரம்

    5.  தஞ்சாவூர்

    6.  திருவாரூர்

    7.  நாகப்பட்டினம்

    8.  புதுக்கோட்டை

    9.  ராமநாதபுரம்

    10.  திருநெல்வேலி

    11.  கன்னியாகுமரி 

  15. வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் எந்த கடலில் உருவாகும் வெப்ப மண்டல சூறாவளிகள் தமிழக கடற்கரையை தாக்குகின்றன?  வங்க கடலில் உருவாகும் 

  16. தமிழ்நாட்டில் புயல் தாக்குவதனால் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எவை? 

    1.  சென்னையின் வடபகுதி

    2.  காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி

    3. விழுப்புரம் கிழக்கு பகுதி

    4.  கடலூரில்  வடகிழக்குப் பகுதி

    5.  புதுச்சேரி 

  17. தமிழ்நாடு நீர் தேவைக்கு பெரிதும் எதனை நம்பியுள்ளது? பருவமழையை 

  18. தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை எத்தனை சதவீதமாக உள்ளது? 19.3%

  19.  தமிழ்நாட்டின் மொத்த நீர் வளம் எவ்வளவு? 1,587 மில்லியன் கன அடி (tmc)

  20.  தமிழ்நாட்டின் மொத்த நீர் தேவை எவ்வளவு? 1,894 மில்லியன் கன அடி (tmc)

  21. தமிழகத்தின் நிலத்தடி நீர் வளத்தின் அடிப்படையில் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 385 பகுதிகள்

  22.  தமிழகத்தில் நிலத்தடி நீர் வளத்தின் அடிப்படையில் எத்தனை பகுதிகள் மட்டுமே பாதுகாப்பானதாக உள்ளது ? 145 பகுதிகள்

  23. தமிழகத்தில் எத்தனை சதவீத பகுதிகள் ஏற்கனவே உவர் தன்மையுடன் நீரை கொண்டு உள்ளது? 2 சதவீத பகுதிகள் 

  24. தமிழகத்தில் மொத்தம் எத்தனை சதவீத நிலப்பகுதி நீர் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன? 64 சதவீத நிலப்பகுதி

  25. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள் அதிக வறட்சியான மண்டலத்தில் உள்ளன? 

    1. கோயம்புத்தூர்

    2.  தர்மபுரி

    3.  மதுரை

    4.  இராமநாதபுரம்

    5.  சேலம்

    6.  திருநெல்வேலி

    7.  திருச்சி

  26. தமிழக மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ எத்தனை சதவீத நிலப்பரப்பு பாலைவனமாகும் மற்றும் நிலம் தரம் குறைதலுக்கு உள்ளாகியுள்ளன? 12% 

  27. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் நீர் வறட்சியினால் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளானவையாகும்? 

    1.  தேனி

    2.  விருதுநகர்

    3.  நீலகிரி

    4.  கன்னியாகுமரி 

  28. தமிழ்நாட்டின் சமீபத்திய காட்டு தீ விபத்து எந்த ஆண்டு நடந்தது?  2018ஆம் ஆண்டு மார்ச் 11ம் நாள் 

  29. தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய காட்டு (குரங்கனி மலையில்) தீவிபத்தில் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்? தேனி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 37 பேர் (23 பேர் உயிரிழப்பு)

  30. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதங்களில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதித்துள்ளது?  பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை

  31. எப்போது உருவாகிய சுனாமி அலைகளால் வங்கக்கடலில் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன?  2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் (இந்திய நேரப்படி 7.29 மணி)

  32. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலை எங்கு உருவாகியது?  இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் 8.9 ரிக்டர் அளவுள்ள புவி  அதிர்வினால் ஏற்பட்டது

  33. 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் சுனாமி அலைகள் எந்த ஆண்டுகள் தோன்றின? 1881ஆம் ஆண்டு மற்றும் 1941ஆம் ஆண்டு 

  34. இந்தியாவில் நில அதிர்வினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் மண்டலங்கள் எங்கு உள்ளன?  வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில்

  35.  எத்தன்மையுடைய  நில அதிர்வு அபாய நேர்வு கொண்ட  மண்டலத்தில் தமிழகம் உள்ளது? மிதமான அபாய நேர்வு கொண்ட மண்டலத்தில்

  36. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித நடவடிக்கைகளால் பேரழிவு நிகழ்வுகள் ஏற்படுவதை எவ்வாறு அழைக்கிறோம்?  மனிதனால் உருவாகும் பேரிடர்கள் 

  37. மனிதனால் ஏற்படும் பேரிடர்கள்

    1.  அபாயகரமான பொருட்கள்

    2. தொழிற்சாலைக் கழிவுகள்

    3. தொழிற்சாலைக் கசிவுகள்

    4.  நிலத்தடி நீர் மாசுபடுதல்

    5.  போக்குவரத்து விபத்துகள்

    6.  குண்டு வெடிப்புகள்

    7.  பயங்கரவாத நடவடிக்கைகள்

    8.  தீ

  38. இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகர் எனக் கருதப்படுவது எது?  சிவகாசி

  39. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்கள் தமிழகத்தில் எங்குள்ளன?  விருதுநகர் மற்றும் சிவகாசி 

  40. மனித உயிருக்கு மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கை இது? இடர் தணித்தல் 

  41. பேரிடர்  அவசர கால தொலைபேசி எண் எது? 1077

  42. பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறை இது? மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிபதி

  43. இந்தியாவில் சாலை விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?  தமிழ்நாடு 

  44. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில் எத்தனை சதவீதம் தமிழகத்தில் நடைபெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? 15 சதவீதம் 

  45. பேரிடர்களின் எண்ணிக்கையையும் அதன் எதிர்மறையான விளைவுகளையும் அதிகப்படுத்தியுள்ளது எது?  மக்கள் தொகை மற்றும் பொருளாதார போக்கில் ஏற்பட்ட அதிக மாற்றங்கள் 

  46. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார்? முதலமைச்சர் 

  47. பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாவட்டத்தின் நிர்வாக பொறுப்பு யாரிடம் உள்ளது ? மாவட்ட ஆட்சியர் 

  48. மனிதர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய புவியியலின் ஒரு பகுதி எதுமானுடவியல் 

  49. மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள வளரும் நாடுகளில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் வாழும் மக்கள் எதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? இயற்கை பேரிடரால் 

  50. அடிக்கடி நிகழும் பேரிடர்கள் எவை?

    1.  வெள்ளம் 

    2. சூறாவளி

    3.  புயல் 

  51. ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் படியான தொடர்ச்சியான இடையூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பேரிடர் 

  52. பேரிடர்களின் வகைகள் எத்தனை? 2 வகை 

    1. இயற்கை பேரிடர்

    2. மனிதனால் உண்டாகும் பேரிடர் 

  53. சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிலநடுக்கம் 

  54. நிலநடுக்கம்  நீடிக்கும் காலம் எவ்வளவு?  சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை 

  55. நிலநடுக்கம் தோன்றும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிலநடுக்க மையம்

  56. நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாக புவிப் பரப்பில் காணப்படும் பகுதி எது?  மையப்புள்ளி (epicenter)

  57. பூமியின் உட்பகுதியில் இருந்து சிறிய திறப்பு வழியாக லாவா சிறிய பாறைகள் மற்றும் நீராவி போன்றவை பூமியின் மேற்பரப்பிற்கு உமிழப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? எரிமலை 

  58. நிலநடுக்கம் எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகள் தோற்றுவிக்கப்படும் பேரலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? சுனாமி 

  59. மிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியிலிருந்து உருவாவது இது?  சூறாவளி 

  60. மழை பெய்யும் பகுதிகளில் இயல்பான அளவையும் மீறி மிக அதிக அளவில் நீர் வழிந்தோடுவது எவ்வாறு அழைக்கப்படும்? வெள்ளம் 

  61. பாறைகள் பாறை சிதைவுகள் மண் போன்ற பொருட்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது எவ்வகை பேரிடர்?  நிலச்சரிவு 

  62. பெருமளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது எவ்வகை பேரிடர்?  பனிச்சரிவு 

  63. வளிமண்டல காலநிலைகளால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? இடி 

  64. வளிமண்டல காலநிலைகளால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படுவதால்  திடீர் ஒளியும் அதிரும் ஒலி அலைகளும் ஏற்படும்  நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? இடி மின்னல் 

  65. சாலை விதிகளை மீறுவதாலும் கவனக் குறைவினாlலும் ஏற்படும் பேரிடர் எது?  சாலை விபத்து 

  66. சமூக அமைதியின்மை அல்லது கொள்கை வேறுபாடுகள் போன்றவைகள் எதற்கு வழிவகுக்கின்றன?  தீவிரவாதத்திற்கு 

  67. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழகத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் எது?  நாகப்பட்டினம் மாவட்டம் 

  68. சுனாமி முன்னறிவிப்பு செய்வதற்காக இந்திய அரசு எங்கு சுனாமி முன்னெச்சரிக்கை INCOIS (Indian National Cetre for Ocean Information Services) அமைப்பை நிறுவியது? ஹைதராபாத்தில் 2007ஆம் ஆண்டு

  69. அதிக மழைப் பொழிவின் போது எத்தனை மணி நேரத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஆகும்? ஆறு மணி நேரத்திற்குள் 

  70. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரு நகரம் எது?  சென்னை

  71. பேரிடர் வாய்ப்பு குறைப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் 4 முக்கிய காரணிகள் எவை?

    1. பரப்புரை செய்தல்

    2. பங்கேற்பு கற்றல்

    3. முறைசாரா கல்வி 

    4. பள்ளியில் முறைசார்ந்த தலையீடு

  72. புவியோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது நிலத்தை அதிரவைக்கும் அசைவையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?  நிலநடுக்கம் 

  73. எந்த ஒரு இடத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிலநடுக்க மையம்

  74. மையத்திற்கு மேல் உள்ள புவியோடு பகுதியில் அமைந்திருக்கும் புள்ளியை எவ்வாறு அழைக்கின்றனர்? நிலநடுக்க மேல் மையப்புள்ளி 

  75. நிலநடுக்க மையத்திலிருந்து அதிர்வுகள் எந்த திசையில் பயணிக்கும்? பல்வேறு திசைகளில் 

  76. புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை எவ்வாறு குறிப்பிடுவர்? நில அதிர்வு மானி  அல்லது சீஸ்மோகிராப் 

  77. நில அதிர்வு மானியின் ஆற்றல் செறிவின் அளவினை கண்டுபிடித்தவர் யார்? ரிக்டர் (அவருடைய பெயராலேயே அளவுகள் குறிக்கப்படுகின்றது)

  78. நில அதிர்வு மானியில் எத்தனை அளவைகள் உள்ளன?  0 முதல் 9 வரை 

  79. சீஸ்மோகிராப் கருவியில் எதற்கும் குறைவான ஆற்றல் செரிவினை  உணர்வது அரிது? 2.0 ரிக்டர் 

  80. சீஸ்மோகிராப் கருவியில் எந்த அளவுக்கு மேல் அதிர்வலைகள் ஏற்படும்போதுதான் நிலம் பிளந்து வீழ்வது ஏற்படுகிறது? 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் 

  81. சீஸ்மோகிராப் கருவியில் எந்த அளவுக்கு மேல் அதிர்வலைகள் ஏற்படும்போது அது வலிமையான நிலநடுக்கம் ஆக உணரப்படுகிறது? 6.0 ரிக்டர் அளவுக்கு மேல் 

  82. சீஸ்மோகிராப் கருவியில் எந்த அளவுக்கு மேல் அதிர்வலைகள் ஏற்படும்போது பெரும் சேதம் ஏற்படுகிறது? 7.0 ரிக்டர் அளவுக்கு மேல் 

  83. பூமி அதிர்வின் மற்றொரு தாக்கம் எது?  எரிமலை வெடிப்பு 

  84. நிலநடுக்கத்தினால் ஏற்படும் முக்கிய விளைவுகள் எவை?

    1. கட்டிடங்கள் இடுதல்

    2. தீ 

    3. நிலத்தடிநீர் அமைப்பும் பெரிதும் பாதிப்படைகிறது 

  85. நிலநடுக்க அலைகள் எத்தனை வகைப்படும்? மூன்று வகைப்படும் 

    1. P அலைகள் அல்லது அழுத்த அலைகள்

    2. S அலைகள் அல்லது முறிவு அடைகள் 

    3. L அலைகள் அல்லது மேற்பரப்பு அலைகள் 

  86. சுனாமி என்பது எந்த மொழிச்சொல்? ஜப்பானிய மொழி 

  87. சுனாமி என்பதன் பொருள் என்ன? கடலில் ஏற்படும் பெரிய அலைகள் அல்லது துறைமுக அலை

  88. எந்தெந்த கடலோரப் பகுதிகளில் சுனாமி அதிகமாக பொதுவாக காணப்படுகிறது? ஜப்பானிய கடலோரப் பகுதிகளிலும் பசிபிக் கடலோர பகுதிகளிலும் 

  89. நிலநடுக்க பிரதேசங்கள் பெரும்பாலும் எந்த பகுதிகளை ஒட்டியே ஏற்படுகின்றன? எரிமலைப் பகுதிகளை ஒட்டியே 

  90. பசுபிக் வளைய பகுதியில் இவ்வுலகின் எத்தனை சதவீத நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன? 68%

  91. இந்தியாவின் எந்தப் பகுதிகள் நிலநடுக்கப் பகுதிகளாக அறியப்பட்டுள்ளன? இமய மலைப் பகுதிகள் கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள் 

  92. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் (இமய மலைப் பகுதிகள் கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள்) ஏற்பட்ட ஆண்டுகள் எவை? 1991ஆம் ஆண்டு உத்தரகாசி  மற்றும் 1999ஆம் ஆண்டு  சமோலி 

  93. எரிமலை வெடிப்பில் நீளமான பிளவு மூலம் நீராவியுடன் கூடிய எரிமலை தாதுக்களும் வெளியேறும் புவியின் ஆழ் பகுதியிலுள்ள வாயுக்கள்  கலந்த திரவ நிலையிலான பாறைக் குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாக்மா 

  94. இந்தப் பாறைக் குழம்பு பூமியின் மேற்பரப்பிற்கு வரும் பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது? லாவா 

  95. எரிமலையின் திறப்பு அல்லது வாய்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? துளை

  96. புவியின் உள்ள ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது எத்தனை மீட்டருக்கு 10 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்து கொண்டே வருகிறது? 35 மீட்டருக்கு 

  97. பூமிக்கடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சென்டி மீட்டருக்கு எத்தனை டன்கள் என்ற அளவில் உயர்கின்றது? 5 டன்கள் 

  98. எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை எவ்வாறு அழைக்கின்றனர்?  எரிமலை ஆய்வியல் (வல்லுனர்கள் எரிமலை ஆய்வியலாளர்கள்)

  99. எரிமலை வெடிப்பு வெளியேற்றத்தின் போது தூக்கி எறியப்படுபவை எவை?  லாவா சாம்பல் நீராவி மற்றும் வாயுக்களும்  கற்களும் 

  100. இந்தோனேசியாவில் உள்ள கரகாட்டாவோ தீவிலுள்ள எரிமலை எப்போது வெடித்து மாக்மாவை வெளியேற்றியது? 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 

  101. லாவாக்களின் ஓட்டம் எதனை பொறுத்தது? அதன் பிசுபிசுப்பு அல்லது ஒட்டும் தன்மையை பொறுத்தது 

  102. லாவா திரவத்தின் ஓட்டம் அதிலுள்ள எதன் அளவை பொருத்ததாகும்?  சிலிக்கா மற்றும் நீரின் அளவை பொருத்ததாகும் 

    1. சிலிகா அதிகம் உள்ளது அமில லாவா

    2. சிலிகா குறைவாக உள்ளது கார லாவா (வேகமாகவும் வெகு தூரத்திற்கு சென்று மென்மையாக பdiகிறது)

  103. சுமத்திராவில் வந்து மியான்மரில் உள்ள நெருப்பு வளையத்தில் உள்ள ஒரே ஒரு  செயல்படும் இந்திய எரிமலை எது? பாரன் தீவு எரிமலை (அந்தமானின் தலைநகரிலிருந்து 135 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது) 

  104. அந்தமான் தீவில் உள்ள பாரன் தீவு எரிமலை கடைசியாக எப்பொழுது எரிமலைக் குழம்பினை வெடித்து வெளியேற்றியது? 2017ஆம் ஆண்டு 

  105. லாவா தன்மை மற்றும் அது வெளியேறும் விதம் ஆகியவற்றைப் பொறுத்து எது அமைகிறது?  எரிமலைகளின் வடிவம் 

  106. எரிமலைகளின் வடிவத்தைக் கொண்டு அவற்றை எத்தனை வகையாக பிரிக்கலாம்? மூன்று வகையாக 

    1. கேடய எரிமலை

    2. தழல் கூம்பு எரிமலை

    3. பல்சிட்டக் கூம்பு எரிமலை 

  107. சிலிக்காவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலைக்குழம்பு வெளியேறும் போது எந்த எரிமலை உருவாகிறது? கேடய எரிமலை 

  108. எந்த எரிமலை அகன்று மென்மையான குன்றுகளை கொண்ட கூம்பு வடிவத்தில் காணப்படும்?  கேடய எரிமலை 

  109. கேடய எரிமலை குன்றுகள் வகை எந்த தீவுகளில் உள்ளது?  ஹவாய் தீவுகளில் 

  110. தழல் கூம்பு வகை எரிமலைகள் எங்கு காணப்படுகின்றன? மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் 

  111. லாவா பல்சிட்டம், எரிமலை சாம்பல் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக படியும்போது எவ்வகை எரிமலைகள் உருவாகின்றன?  பல்சிட்ட கூம்பு எரிமலைகள்

  112. எவ்வகை எரிமலைகள் அடுக்கு எரிமலைகள் எனவும் அழைக்கப்படுகின்றன? Palsitta கூம்பு எரிமலைகள்

  113. பல்சிட்ட கூம்பு எரிமலைகள் எங்கு காணப்படுகின்றன? அமெரிக்காவில் உள்ள  சியாட்டல் நகரத்தின் அருகே உள்ள ஹெலன் எரிமலை

  114. எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு எத்தனை வகையாக பிரிக்கலாம்?  மூன்று வகை 

    1. செயல்படும் எரிமலை

    2. செயல்படாத எரிமலை 

    3. செயலிழந்த எரிமலை 

  115. எவ்வகை எரிமலைகள் அடிக்கடி வெடித்து லாவாக்களை வெளியேற்றும்? செயல்படும் எரிமலை 

  116. பசுபிக் கடற்கரையோரமாக பெரும்பாலான எரிமலைகள் அமைந்திருப்பதால் இப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பசிபிக் நெருப்பு வளையம் 

  117. உலகெங்கும் எத்தனை செயல்படும் எரிமலைகள் உள்ளன? 600 எரிமலைகள் 

  118. செயல்படும் எரிமலைகள் உள்ள பகுதிகள்

    1. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஸ்ட்ராம்போலி 

    2. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள செயின்ட் ஹெலன்

    3. பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள பினாடுபோ, மவுனாலோ (3,255 மீட்டர்) 

  119. உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை இது? பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள மவுனாலோ (3,255 மீட்டர்) 

  120. மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை எது? ஸ்ட்ராம்போலி எரிமலை 

  121. செயல்படாத எரிமலை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? உறங்கும் எரிமலை 

  122. செயல்படாத எரிமலைகள் உள்ள பகுதிகள்

    1. இத்தாலியின் விசுவியஸ்

    2. ஜப்பானின் பியூசியாம்மா எரிமலை

    3. இந்தோனேசியாவின் சிரகோட்டா 

  123. வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்துவிட்ட எரிமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? செயலிழந்த எரிமலை 

  124. இறந்த அல்லது செயலிழந்த எரிமலை எங்கு காணப்படுகிறது?

    1. மியான்மரின் போப்பா எரிமலை

    2. ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மற்றும் கென்யா எரிமலைகள் 

  125. உலகின் முக்கியமான 3 எரிமலை நிகழ்வு பகுதிகள் எவை?

    1. பசுபிக் வளையப் பகுதி 

    2. மத்திய கண்ட பகுதி 

    3. மத்திய அட்லாண்டிக் பகுதி 

  126. மூன்றில் இரண்டு பகுதி எரிமலைகள் எப்பகுதியில் காணப்படுகின்றன? பசுபிக் வளையப் பகுதியில் 

  127. அதிகமான செயல்படும் எரிமலைகளை கொண்டுள்ளதால் பசிபிக் வளைய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பசிபிக் நெருப்பு வளையம் 

  128. இமயமலைப் பகுதியில் உள்ள செயல்படும் எரிமலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? 0

  129. ஹசார்ட் என்றால் எந்த நாட்டு கால்பந்தாட்ட வீரர்?  பெல்ஜியம் 

  130. பூமியில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை பாதிக்கக்கூடிய நிகழ்வை எவ்வாறு அழைக்கிறோம்? (ஹசார்ட் ) இடர் 

  131. ஒரு பொருளோ நபரோ நிகழ்வோ அல்லது காரணியும் மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? (ஹசார்ட்) இடர் 

  132. ஹசார்ட் என்பது எந்த மொழிச்சொல்? ஒரு பழமையான பிரஞ்சு சொல்

  133. ஹசார்ட்  பிரஞ்சு சொல்லின் பொருள் என்ன? பகடை விளையாட்டு 

  134. ஹசார்ட் என்பது அரபு மொழியிலும் ஸ்பானிய மொழியிலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அரபுமொழியில் அஷ்-ஸஹர் என்றும் ஸ்பானிய மொழியில் அசார் என்றும் அழைக்கப்படுகிறது 

  135. பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் எதனால் அதிகரிக்கிறது?  மனித செயல்களால் 

  136. எது வரையறுக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வாகும்? பேரிடர் என்பது 

  137. இந்த நிகழ்வால் மிகப்பெரிய இழப்பு அதிக செலவீனம் ஏற்படுவதோடு அவற்றிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலத்தேவையும் ஏற்படுத்துகிறது?  பேரழிவு 

  138. இடர்களை எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் 

    1. இயற்கையினால் ஏற்படும் இடர்கள்

    2.  மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்

    3. சமூக-இயற்கை காரணிகளால் ஏற்படும் இடர்கள் 

  139. எவ்வகை இடர்களை இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் தவறான செயல்பாடுகள் இணைவதன் மூலம் ஏற்படுகின்றன? சமூக இயற்கைக் காரணிகளால் ஏற்படும் இடர்கள் (பகுதி இயற்கை இடர்கள்)

  140. சதுப்புநில காடுகள் அழிக்கப்படுவதால் கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் இது?  சூறாவளி அலைகள்

  141. தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? 8 வகையாக

    1. வளி மண்டலத்தால் ஏற்படும் இடர்கள் (சூறாவளி புயல் மின்னல் சுழல் காற்று பனிச்சரிவு வெப்ப அலைகள்  மூடுபனி காட்டுத்தீ)

    2. நிலவியல் சார்ந்த இடர்கள் (நில அதிர்வு சுனாமி நிலச்சரிவு நிலம் அமிழ்தல்)

    3. நீரியல் தொடர்பான இடர்கள் ( வெள்ளப்பெருக்கு வறட்சி கடற்கரை அரிப்பு சூறாவளி அலைகள்)

    4. எரி மலை சார்ந்த இடர்கள் (எரிமலை வெடிப்பு மற்றும் ல்லாவா வழிதல்)

    5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள் (மண் காற்று நீர் மாசடைதல் பாலைவனமாதல் புவிவெப்பமடைதல் மற்றும் காடுகள் அழிப்பு)

    6. உயிரியல் சார்ந்த இடர்கள் (சின்னம்மை பெரியம்மை தட்டம்மை பால்வினை தொற்று நோய்கள் எய்ட்ஸ் விச தேனீக்கள்) 

    7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள் (அபாயகரமான கழிவுப் பொருட்களால் ஏற்படுவது,  தீ விபத்து,  கட்டமைப்புக் குறைபாடுகள் பாலங்கள் சுரங்கங்கள் அணைகள் மற்றும் கதிரியக்க விபத்துக்கள்)

    8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள் (தீவிரவாதம் துப்பாக்கிச்சூடு போக்குவரத்து விபத்துகள் மற்றும் உள்நாட்டு கலவரம்)

  142.  புவியின் மேல் ஓட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வுக்கு பெயர் என்ன? நில அதிர்வு 

  143. இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவில் எத்தனை நில அதிர்வு மண்டலங்களாக பிரித்து உள்ளது?  ஐந்து நில அதிர்வு மண்டலங்கள் 

    1. மண்டலம் 5 -  மிக அதிக நில அதிர்வு (வடகிழக்கு இந்தியா முழுமையும்,  ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் ஹிமாச்சல் பிரதேசம் உத்தரகாண்ட் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் அந்தமான் தீவுக்கூட்டங்கள்)

    2. மண்டலம் 4 -  அதிக நில அதிர்வு (ஜம்மு-காஷ்மீர் பிற பகுதிகள்,  இமாச்சல பிரதேசம்,  டெல்லி,  வட மத்திய பிரதேசம்,  பீகார்,  சிக்கிம்,  மேற்கு வங்கம்,  குஜராத்தின் சில பகுதிகள், மேற்குக் கடற்கரையை ஒட்டிய மகாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தான்) 

    3. மண்டலம் 3 - மிதமான நில அதிர்வு (கேரளா,  கோவா,  லட்சத்தீவு,  உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள்,  குஜராத் மற்றும் மேற்கு வங்காளம்,  பஞ்சாபின் சில பகுதிகள்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,  பீகார், ஜார்கண்ட்,  சட்டீஸ்கர்,  மகாராஷ்டிரா,  ஒடிசா,  ஆந்திரப் பிரதேசம்,  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா)

    4. மண்டலம் 2 - குறைவான நில அதிர்வு (நாட்டின் பிற பகுதிகள்)

  144. இந்தியாவின் எந்தப் பகுதியும் எந்த மண்டலத்தின் கீழ் நில அதிர்வு தர நிர்ணய நிறுவனம்  வகைப்படுத்தவில்லை? மண்டலம் 1ன் கீழ் 

  145. வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த பகுதிகளில் சுழலும் வலிமையான காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? சூறாவளி புயல் காற்று என்று

  146. சூறாவளி புயல் காற்று வட அரைக்கோளத்தில் எந்த திசையில் சுற்றுகிறது? கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் 

  147. சூறாவளி புயல் காற்று  தென் அரைக்கோளத்தில் எந்த திசையில் சுற்றுகிறது? கடிகார திசையில் 

  148. எந்தச் சூறாவளிகள் கடும் காற்று அலைகள் மற்றும் கனத்த மழையால் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றன?  அயனமண்டல சூறாவளி 

  149. அயனமண்டல சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வரை வீசக்கூடும்?  200 கிலோ மீட்டர் வரை (மழைப்பொழிவு 50 சென்டிமீட்டர்/நாள் பல நாட்கள் பெய்யும்)

  150. வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை எவ்வாறு அழைக்கிறோம்? புயல் அலை 

  151. புயல் அலைகள் கடற்கரையில்  எப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது? ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் 

  152. புயல் அலைகளால் பாதிப்பிற்குள்ளாகும் கிழக்கு கடற்கரை பகுதிகள் எவை?

    1. ஒடிசாவின் வடபகுதி மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை

    2.  ஓங்கோல் மசூலிப்பட்டினம் இடையே அமைந்துள்ள ஆந்திர கடற்கரை

    3.  தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் (நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிகம்) 

  153. புயல் அலைகளால் பாதிப்பிற்குள்ளாகும் மேற்கு கடற்கரை பகுதிகள் எவை?

    1. மகாராஷ்டிரா கடற்கரை,  வட ஹர்நாயர், தென் குஜராத்தை ஒட்டிய கடற்கரை பகுதி மற்றும் காம்பே வளைகுடா சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் 

    2. கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடலோரப் பகுதி 

  154. இந்தியாவில் புயல் அலைகளால் எந்த கடற்கரைப் பகுதிகளில் பாதிப்புகள் குறைவாக உள்ளது? கிழக்கு கடற்கரை பகுதிகள் 

  155. மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நீர் பற்றாக்குறையை எவ்வாறு  வரையறுக்கப்படுகிறது? வறட்சி 

  156. வறட்சியை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?  மூன்று வகைகளாக

    1. வானிலையியல் வறட்சி

    2. நீரியல் வறட்சி 

      1. நிலத்தடி நீர் வறட்சி

      2. புவி மேற்பரப்பு நீர் வறட்சி

    3. வேளாண் வறட்சி

  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழையின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருக்கும் சூழலை எவ்வாறு அழைக்கலாம்? வானிலையியல் வறட்சி  

  2. நீரோடைகள் ஆடுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படும் சூழல் எத்தகைய வறட்சி எனப்படும்?  நீரியல் வறட்சி 

  3. மழை பற்றாக்குறை காரணமாக வேளாண் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையை குறிப்பது எத்தகைய வறட்சி?  வேளாண் வறட்சி

  4. இந்தியாவில் எதனால் வறட்சி ஏற்படுகிறது? பருவ மழை பொய்த்தல் 

  5. இந்தியாவில் எத்தனை பங்கு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன?  மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் 

  6. இந்தியாவில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்படும் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை எவ்வளவு? 16 சதவீத நிலப்பரப்பு மற்றும் 12 சதவீத மக்கள் தொகை 

  7. இந்தியாவில் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் ஆண்டு மழைப்பொழிவு எவ்வளவு? 60 செ.மீ. க்கும் குறைவானது 

  8. எது புவியீர்ப்பு விசையினால் பாறைகள் மற்றும் மண் தாவரங்கள் ஆகியவற்றை நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வை குறிப்பதாகும்?  நிலச்சரிவு 

  9. இந்தியாவில் சுமார் எத்தனை சதவீத நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகளாகும்?  15% 

  10.  இந்தியாவில் நிலச்சரிவு அதிகமாக காணப்படும் பகுதிகள் எவை?

    1. இமயமலைச் சரிவுகளில் 

    2. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் 

    3. ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகள்

  11. தமிழ்நாட்டின் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் எவை?

    1. திண்டுக்கல் மாவட்டம் (கொடைக்கானல் மலை)

    2. நீலகிரி மாவட்டம் 

  12. கடலடி நில அதிர்வு கடலடி நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றின் காரணமாக கடலில் ஏற்படும் பேரலையின் பெயர் என்ன?  சுனாமி 

  13. சுனாமி அலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும்?  மணிக்கு சுமார் 640 கிலோமீட்டர் முதல்  960 கிலோமீட்டர் 

  14. சுனாமி என்பதன் பொருள் என்ன? துறைமுக அலை 

    1.  ஜப்பானிய சொல்

    2.  சு =  துறைமுகம்

    3.  னாமி =  அலை 

  15. 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமி (ரிக்டர் அளவுகோலில் 9.1)  பேரலை பெருத்த சேதத்தை ஏற்படுத்திய நாடுகள் எவை?  இந்தோனேசியா இலங்கை இந்தியா தாய்லாந்து சோமாலியா மாலத்தீவு 

  16. செர்னோபில் அணு உலை உள்ள நாடு எது?  சோவியத் யூனியன் (பிரிபியாட் அருகில்) சுற்றுலா தளம் 

  17. செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஆண்டு எது? 1886 ஏப்ரல் 26 

  18. செர்னோபில் அணு உலை விபத்தில் எத்தனை மடங்கு அதிகமான கதிர்வீச்சை  வெளிப்படுத்தியது? ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சு

  19. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு எது?  1945

  20.  எந்த அணு விபத்து உலக வரலாற்றில் மிகப்பெரிய அணு விபத்தாக பதிவாகியது? செர்னோபில் அணு உலை விபத்து 

  21. செர்னோபில் அணு உலை விபத்து நடைபெற்ற பகுதி தற்போது எங்கு உள்ளது? உக்ரைன் மற்றும் பெலாரஸ் கொண்ட பகுதி 

  22. எந்த நாட்டில் 2016ஆம் ஆண்டு கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம் என அந்த நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது? உக்ரைன் நாட்டில் 

  23. எந்த முக்கிய வாயு தாவரங்களுக்கு உணவு தயாரிப்பதற்கும் மற்றும் காற்றை மந்தமாக்கவும் பயன்படுகிறது? நைட்ரஜன் 

  24. காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு என்ன? 20.95%

  25. நீரின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீர் மாசு 

  26. எந்த தடுப்பு நடவடிக்கைகள் பொருளாதார இழப்பை அதிகரிக்கக்கூடும்?  தாமதமான தடுப்பு நடவடிக்கைகள்

  27. எந்த தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை இடர் குறித்த அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் (1998-2017) உலக அளவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது?  ஜெர்மன்-வாட்ச் என்ற தனியார் அமைப்பு 

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...