ஆகஸ்ட் மாத நடப்பு நிகழ்வுகள் 2019
தமிழகம்
- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆகஸ்ட் 28 முதல் எத்தனை நாட்கள் அமெரிக்கா இங்கிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்? - 14 நாட்கள்
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார்? - லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை
- தொற்று மற்றும் தொற்றா நோய்களை தடுத்தல், கட்டுப்படுதல், சிகிச்சை அளித்தல் ஆகியவை சார்ந்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்த எந்த நிறுவனத்துடன் தமிழக அரசு நோக்க அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது? - லண்டனில் உள்ள பழமை வாய்ந்த ஹைஜன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன்
- தமிழகத்தில் சுமார் (4000) நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை கீறல் ஓவியங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன? - தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சீல நாயக்கனூர்
- 2019 ஆகஸ்ட் மாதம் ஜவுளி பதனிடும் குழுமம், புதிய தொழில் பூங்கா ஆகியவற்றிற்கு தமிழக முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டிய இடம் எது? - விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி
- இந்தியாவின் முதல் நிதி தொழில்நுட்ப மையம் எந்த பெயரில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? - FinBlue என்ற பெயரில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது
- இந்தியாவின் முதல் தொழில்நுட்ப மையமான FinBlue எந்தெந்த நிறுவனங்கள் இணைந்து அமைத்துள்ளன? - மத்திய அரசின் இந்திய மின்னணு தொழில்நுட்ப பூங்கா மற்றும் தமிழக அரசின் எல்காட் நிறுவனம்
- தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2019 வரை எத்தனை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது? - 32 பொருட்களுக்கு
- அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மாணவி யார்? - மதுரையைச் சேர்ந்த மாணவி J தான்யா தர்சனம்
- 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள இடம் எது? - சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளம்
- சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக முதல்வர் பழனிசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ரோந்து வாகனங்கள் (40-ம்) எந்த பெயரில் செயல்படுகின்றன? - அம்மா ரோந்து வாகனங்கள்
- அம்மா வந்து வாகனத்திற்கு தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்கள் எவை? - 1091 பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் 1098 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக
- பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு என்ற திட்டத்திற்காக மத்திய அரசு தேர்வு செய்துள்ள நகரங்கள் எத்தனை? - எட்டு நகரங்கள் (ஹைதராபாத் சென்னை மும்பை லக்னோ டெல்லி கல்கத்தா அகமதாபாத் பெங்களூரு) shortcut (ஹை நம்ம CM லக்க பாத்தியா டெய்லியும் கல்கத்தாவில் இருக்கிற அவங்க அக்கா வீட்டுக்கு போயிட்டு பொங்கல் சாப்பிடுறார்)
- சென்னையில் முதன் முறையாக மின்சார பேருந்து சேவை CM அவர்களால் தொடங்கப்பட்ட நாள் எது? - 26/08/2019
- நாட்டிலேயே முதன்முறையாக 2 கோடி மதிப்பீட்டில் தக்காளியை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்களை எந்த மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்? - தமிழக முதல்வர் (கிருஷ்ணகிரி தர்மபுரி கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில்)
- நாட்டின் முதலாவது தேசிய பறவைகள் சூழியல் நச்சியல் மன்றம் எங்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்துள்ளார்? - கோவை சலீம் அலி இயற்கை அறிவியல் மற்றும் பறவைகள் ஆராய்ச்சி மையம் (1990 தொடங்கபட்ட ஆண்டு)
- வர்ம கலை அறிவியல் குறித்தான இரண்டு நாள் தேசிய மாநாடு எங்கு தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது? - சென்னையில் ( ஆகஸ்ட் 22/23)
- ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தில் (போஷன் அபியான்) சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள் எத்தனை? - முதல் இடத்திற்கான இரண்டு விருதுகள் மற்றும் இரண்டாம் இடத்திற்கான ஒரு விருது
- போஷன் அபியான் திட்டம் பிரதமரால் மார்ச் 8 2019ல் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது? - ராஜஸ்தான் மாநிலம் ஜுன்-ஜுனோ
- தமிழ் வளர்ச்சி துறை நடத்தும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை ஆகஸ்ட் மாதம் 2019 (18-24) எங்கு நடைபெற்றது? - மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில்
- 15/8/2019 தமிழக முதல்வர் அவர்கள் எந்த மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்? - வேலூர் மாவட்டத்தை (ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தலைமை இடங்கள்)
- வேலூர் மாவட்டத்தில் எந்த இடத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்தப் படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்? - கீழ்வழிதுணையான்குப்பம் எனப்படும் கேவி குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு
- தமிழக அரசின் சுதந்திர தின விருதுகள் 2019
- காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் நிறைவு பெற்ற நாள் இது? - 16/8/2019
- முதலாவது சர்வதேச மாநாடு அகில உலக கம்பன் கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறையுடன் இணைந்து எங்கு நடத்தியது? - சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாநில கல்லூரியில் (2019 அக்டோபர் மாதம் 5 & 6)
- அறவாணர் ஆராய்ச்சியின் அறக்கட்டளையின் அறவாணர் சாதனை விருது யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? - சிற்பி பாலசுப்ரமணியன் மற்றும் க ராமசாமி, தமிழ் பற்றாளன் ஆகியோருக்கு
- 2019 தமிழக அரசின் கலைமாமணி விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது? - 200 நபர்களுக்கு
- 2019 வரை எத்தனை ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது? - எட்டு ஆண்டுகளாக
- அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தமிழ் கலைஞர்களுக்கான விருதுகள் 2016 முதல் 2018 வரை
- இந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் எத்தனை சிறப்பு கலைமாமணி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது? - 3 விருதுகள்
- கலைமாமணி விருது வழங்கப்படும் 3 சவரனுக்கு பதிலாக இனி எத்தனை சவரன் எடையுள்ள பதக்கங்கள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது? - 5 சவரன்
- எங்கு எலும்பில் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? - கீழடி சிவகங்கை மாவட்டம்
- தமிழகத்தில் எத்தனை சரணாலயங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க ஒப்புதல் அளித்து விட்டதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்? - 11 சரணாலயங்கள்
- நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையான ரூபாய் 2000 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ள அரசு எது? - தமிழக அரசு
- தமிழக அமைச்சரவையிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடர்பு தமிழக ஆளுநரால் யாருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது? - மணிகண்டன் நீக்கப்பட்டு அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்