TNPSC Tamil Material ஆறாம் வகுப்பு தமிழ் கேள்வி பதில்கள் (பழைய பாடத்திட்டம்) part 1





ஆறாம் வகுப்பு தமிழ்  கேள்வி பதில்கள்

(பழைய பாடத்திட்டம்)



  1. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்து -  என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - திருவருட்பா
  2. திருவருட்பா பாடல்களை எழுதியவர் -  ராமலிங்க அடிகளார் என்கின்ற திருவருட்பிரகாச வள்ளலார்
  3. வள்ளலார் பிறந்த ஊர் -  கடலூர் மாவட்டம் மருதூர்
  4. வள்ளலாரின் பெற்றோர்கள் -  ராமையா பிள்ளை, சின்னம்மையார்
  5. ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறைகண்ட வாசகம் என்ற நூல்களை எழுதியவர் -  வள்ளலார்
  6. வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன? -  திருவருட்பா எனும் தலைப்பில்
  7. வள்ளலார் வழங்கிய நெறி எது? - சமரச சன்மார்க்க நெறி
  8. வள்ளலார் அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக ஆலய அமைப்பு இது? -  சன்மார்க்க சங்கம்
  9. மக்களின் பசித்துயர் போக்கி உணவளிக்க அறச்சாலை அமைத்தவர் யார்? -  வள்ளலார்
  10. மக்களின் அறிவு நெறி விளங்க வள்ளலார் தொடங்கி அமைப்பு இது? -  ஞான சபை
  11. வள்ளலார் சத்திய தருமச்சாலை எங்கு தொடங்கினார்? -  வடலூரில்
  12. வள்ளலார் வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.1.1874
  13. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் யாருடையது? -  வள்ளலார் உடையது
  14. திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை? -  முப்பால், பொதுமறை, தமிழ்மறை
  15. உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது? -  திருக்குறள்
  16. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் இது?  கிமு 31
  17. கோபம் என்பதன் தமிழ் சொல் என்ன? -  சினம்
  18. ஆடிப்பெருக்கு நாளில் எதனை ஆற்றில் விட்டால் புண்ணியம் என்பது சாஸ்திரம்? -  சுவடிகளை
  19. ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்ட நிகழ்வு நடைபெற்ற   ஊர் எது?- ஈரோடு மாவட்டம் கொடுமுடி
  20. பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு என்ன பெயர்? -  ஓலைச்சுவடிகள்
  21. ஓலைச்சுவடி எழுத்துக்களில் எவை எவை இருக்காது? -  புள்ளி, ஒற்றை கொம்பு, இரட்டைக் கொம்பு
  22. ஓலைச்சுவடியில் உள்ள பேரன்  எனும் சொல்லை எவ்வாறு படிப்பது? - பேரன,  பெரன
  23. ஓலைச்சுவடியில் உள்ள வரிகளை எவ்வாறு  பொருள் கொள்வர்? - முன்னும் பின்னும் உள்ள வரிகளைக் கொண்டு
  24. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது?  99 வகையான பூக்கள்
  25. குறிஞ்சிப்பாட்டு எந்த நூல்களில் ஒன்று? -  பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று
  26. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் யார்? -  கபிலர்
  27. எதனையும் அரைகுறையாக செய்ய விரும்பாத சுறுசுறுப்பான தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியை மேற்கொண்டவர் யார்? -   உவேசா அவர்கள்
  28. உவேசா -ன் ஆசிரியர் பெயர் என்ன? -  மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
  29. உவேசா  என்பதன் பொருள் என்ன? -  உத்தமதானபுரம் வேங்கட சுப்புவின் மகனார் சாமிநாதன்
  30. உவேசா   வாழ்ந்த காலம் - 19.2.18 55 - 28.4. 1942
  31. உவேசா  தன் வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடராக எழுதினார்? -  ஆனந்த விகடன் இதழில்
  32. உவேசா   தன் வாழ்க்கை வரலாற்றை என்ற தலைப்பில் நூலாக எழுதினார்? -   என் சரிதம் என்னும் பெயரில்
  33. என் சரிதம் எனும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது? -  இரண்டு தொகுதிகளாக
  34. உ வே சா மொத்தம் எத்தனை நூல்களை பதிப்பித்தார்? -  80 நூல்கள்
    1. எட்டுத்தொகை 8
    2. பத்துப்பாட்டு 10
    3. சீவக சிந்தாமணி 1
    4. சிலப்பதிகாரம் 1
    5. மணிமேகலை   ஒன்று
    6. புராணங்கள் 12
    7. உலா 9
    8. தூது நூல்கள் 6
    9. கோவை 6
    10. வெண்பா நூல்கள் 13
    11. அந்தாதி 3
    12. பரணி 2
    13. மும்மணிக்கோவை 2
    14. இரட்டைமணிமாலை 2
    15. பிரபந்தங்கள் 4
  35. உ வே சா  பெயரால் சென்னை பெசன்ட் நகரில் செயல்பட்டு வரும் நூல் நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1942 ( ஆறாம் வகுப்பு) 1947 ( பத்தாம் வகுப்பு)
  36. உ வே சா  அவர்களின் தமிழ்ப்பணிகளை பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார் யார்? -   ஜி யு போப், ஜூலியல் வின்சோன்
  37. உ வே சாவுக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு? - 2006
  38. உவேசா பிறந்த ஊர் எது? -  திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  39. உவேசாவின் சிறப்பு பெயர் என்ன? -  தமிழ் தாத்தா
  40. கடைசிவரை நம்பிக்கை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? -  அரவிந்த் குப்தா
  41. கடைசி வரை என்ற சிறுகதை இடம் பெற்ற நூல் எது? -  டென் லிட்டில் பிங்கர்ஸ்
  42. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  2 லட்சம் ஜப்பானியர்
  43. ஜப்பானியர் வணங்கும் பறவை எது? -  கொக்கு
  44. காகிதத்தில் ஆயிரம்  கொக்குகள் செய்தால் நோய் குணமாகும் என்பது  யாருடைய நம்பிக்கை? - ஜப்பானியர்கள் நம்பிக்கை
  45. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர்  எவ்வாறு அழைத்தனர்? - ஒரிகாமி
  46. சடகோ செய்த மொத்த கொக்குகள் எவ்வளவு? - 644 கொக்குகள்
  47. கடவுளின் தோழிகள்  எத்தனை கொக்குகள் செய்தனர்? - 356 கொக்குகள்
  48. சடகோவின் தோழி பெயர் என்ன? - சிசுகோ
  49. குழந்தைகள் அமைதி நினைவாலயம் எங்கு உள்ளது ? - ஹிரோஷிமா நகரின் மையத்தில்
  50. குழந்தைகள் அமைதி நினைவாலயம் எழுதியுள்ள வாசகம் என்ன? -  உலகத்தில் அமைதி வேண்டும்! இஃது எங்கள் கதறல்! இஃது எங்கள் வேண்டுதல்!
  51. குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டப்பட்டது? -  சடகோ நினைவாக
  52. சடகோ எந்த ஆண்டு எது? - 1955  அக்டோபர் 25
  53. நாம் பேசும் மொழியை,  எழுதும் மொழியை முறையாக புரிந்து கொள்ள என்ன தேவை? -  இலக்கணம் தேவை
  54. “அ” என்னும் எழுத்து எதனை குறிக்கிறது? -  மனிதனை
  55. நட்பு எழுத்துக்களை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது? -  இன எழுத்துக்கள்
  56. டேரிபாக்ஸ்  எந்த நாட்டைச் சேர்ந்தவர்? -  கனடா
  57. டேரிபாக்ஸ்  என்பவர் என்ன விளையாட்டு வீரர்? -  கால்பந்தாட்டம்
  58. டேரிபாக்ஸ்  எந்த நோயினால் பாதிக்கப்பட்டு தனது வலது காலை இழந்தார்? -  புற்றுநோய்
  59. கனடாவின் சாலைகளில் தொடர் ஓட்டம் ஓட  டேரிபாக்ஸ் முடிவு செய்ய காரணம் என்ன? -  புற்று நோயாளிகள் நல்வாழ்வுக்காக நிதி திரட்ட
  60. டேரிபாக்ஸ்  எத்தனை நாட்கள்  தொடர் ஓட்டம் ஓடினார்? - 143 நாட்கள்
  61. டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்  ஆண்டுதோறும் நடத்தப்படும் நாள் எது? -  செப்டம்பர் 15ஆம் நாள்
  62. சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு கூடைப்பந்தாட்டம் விளையாடி பல பரிசுகளை வென்றவர் யார்? - டேரிபாக்ஸ்
  63. நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? -  நாலடியார்
  64. நாலடியார் நூல் யாரால் எழுதப்பட்டது? -  சமண முனிவர்
  65. சிறந்த நட்புக்கு நாலடியார் கூறும் விளக்கம் யாது? -   வாய்க்கால்
  66. நாலடியார் எந்த நூல்களுள் ஒன்று? - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  67. சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் இது? -  நாலடியார்
  68. நாலடியாரில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை? - 400  பாடல்கள்
  69.  சங்க நூல்கள் எனப்படுபவை எவை?   - பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
  70. பதினெண் மேல் கணக்கு நூல்கள் யாவை? - பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
  71. பதினெண் என்பதன் பொருள் என்ன? - 18  
  72. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலானவை என்ன நூல்கள்? -  பெரும்பாலானவை அறநூல்கள்
  73. பாரத தேசம் என்னும் பாடலின் ஆசிரியர் யார்? -  பாரதியார்
  74. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர் யார்? -  பாரதியார்
  75. உழு படை என்பதன் பொருள் என்ன?  - வேளாண்மை செய்ய பயன்படும் கருவிகள்
  76. சாதி இரண்டொழிய வேறில்லை என்பது  யாருடைய சொல்? - அவ்வையின் வாக்கு
  77. தமிழ் மகள் என அழைக்கப்படுபவர் யார்? -  அவ்வையார்
  78. பாட்டுக்கொரு புலவன் என கொண்டாடப்படுபவர் யார்? -  பாரதியார்
  79.  கனவு காண்பதில்   இவருக்கு இணையாக கனவு காண்பவர் யாரும் இல்லை? -  பாரதியார்
  80. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்னும் பாடல் வரி எந்த பாடலிலும் ஒரு பகுதியாகும்? -  வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் இந்த பாடலின் ஒரு பகுதி ஆகும்
  81. பாரதியார் வாழ்ந்த காலம் எது? - 11/12/1882 - 11/9/1921
  82. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது? -  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் என்ற சிற்றூரில்
  83. பருவநிலை மாறும் போது பறவைகள் இடம் விட்டு இடம் பெயரும் அதற்கு என்ன பெயர்? -  வலசை போதல்
  84. உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்தின் பெயர் என்ன? -  பறவைகள் புகலிடம்
  85. நிலத்திலும் அடர் உப்புத் தன்மையுள்ள நீரிலும்  வாழும் கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மையுடைய பறவை எது? -   பூநாரை
  86. வெயிலும் மழையும் பனியும் மாறி மாறி வருவதை என்னவென்று கூறுவர்? -பருவநிலை மாற்றம்
  87. பருவகால மாற்றத்தை  உணர்த்துவன எது? - பறவைகள்
  88. உலகம் முழுவதும் எவற்றைப் பரப்ப வேலைகளை பறவைகள் செய்கின்றன? - மரம் செடி கொடிகளை
  89. மனிதனின் நல்ல நண்பன் எது? -  பறவைகள்
  90. உழவனின் நல்ல நண்பன் எது? - பாம்பு
  91. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வகை பறவைகள் உள்ளன? - 2400 வகைப் பறவைகள்
  92. பறவைகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? -  ஐந்து வகையாக
  93. பறவைகளின் வாழும் இடங்கள் எவை? -  மரங்கள்
  94. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் எத்தனை? - 13
  95. சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் யாவை? -  மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில்,  பனங்காடை, தூக்கணாங்குருவி
  96. நீர்நிலைகளில் வாழும் பறவைகள் யாவை? -  கொக்கு, தாழைக்கோழி, பவளக்காளி, ஆற்று உள்ளான்,  முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன்,  ஊசிவால் வாத்து
  97. மலைகளில் வாழும் பறவைகள் யாவை? -  இருவாட்சி, செந்தலைபூங்குருவி, மின்சிட்டு,    கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு,  மரங்கொத்தி, சின்ன குறுவான் , கொண்டை உழவாரன், இராசாளிப் பருந்து,   பூமன் ஆந்தை
  98. பாம்பு எந்த வகையைச் சார்ந்தது? -  ஊர்வன வகை
  99. உலகம் முழுக்க எத்தனை வகை பாம்புகள் இருக்கின்றன? -  2750 வகைகள்
  100. எத்தனை வகை பாம்புகள்   மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை? - 52 வகைபாம்புகள்  மட்டுமே
  101. பாம்பினம் உலகம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது? - பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது
  102. உலகிலேயே மிகவும் நீளமான நஞ்சு மிக்க பாம்பு எது? - இராஜநாகம்
  103. ராஜநாகம் பாம்பின் நீளம் எவ்வளவு? - 15 அடி
  104. கூடுகட்டி வாழும் பாம்பு எது? -  ராஜநாகம்
  105. பாம்பு அடிக்கடி நாக்கை வெளியே   நீட்டுவது எதற்காக? - சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள
  106. கோப்ராக்சின் என்னும் வலி நீக்கும் மருந்து செய்ய பயன்படுவது எது? - நல்ல பாம்பின் நஞ்சு
  107. தோலுக்காக பாம்புகள்  கொல்லப்படுவதை தடுக்க இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றியுள்ளது? - 1972 ன் படி
  108. பாம்புகள் எங்கு நெஞ்சம் வைத்திருக்கின்றன? - பற்களில்
  109. பாம்புகள் காது உண்டா? -  காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை
  110. பாம்புகள்  எதனை வைத்து முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன? -  தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து
  111. தமிழில் உள்ள  முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? -  30
  112. தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை? - 216
  113. பேச்சிலும் எழுத்திலும் அதிகம் பயன்படுத்தும் எழுத்துகள் யாவை? -  கி, சி, பி, டி, தி, மி
  114. தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் -  உடனிலை மெய்மயக்கம் எனப்படும்
  115. தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் மட்டும் சேரும்  எழுத்துக்கள் - வேற்றுநிலை மெய்மயக்கம்
  116. பழங்காலக்  கொல்லுப்பட்டறைகள்  மறவர்களுக்கு வடித்து கொடுத்தவை எவை? -   வில், வேல், வாள், ஈட்டி, கேடயம்
  117. பழங்காலக்  கொல்லுப்பட்டறைகள்  உழவர் பெருமக்களுக்கு செய்து அளித்த பொருள்கள் எவை? -   அச்சு, கடையாணி, அரிவாள், கோடாரி, கத்தி, கடப்பாரை
  118. வேளாண் கருவிகள் எவை? -  அரிவாள், கோடாரி, கத்தி, கடப்பாரை
  119. பழந்தமிழர் யோகக் கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக இன்றளவும் பறைசாற்றி நிற்பது எது? -  கூரம் நடராசர் செப்புத்திருமேனி
  120. பழங்காலக்  கொல்லுப்பட்டறைகள்   சங்கத் தமிழ்ப் புலவர்களுக்கு செய்து அளித்த பொருள்கள் எவை? -   எழுத்தாணிகள்
  121. சாலையோரங்களில் புளியமரத்தடியில் ஓலைகளால் வேயப்பட்டு கொட்டகைகளில் இயங்கிவந்த  தொழில் கூடங்கள் எவை? - இரும்பு கொல்லுப்பட்டறைகள்
  122. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார்? -  விளம்பிநாகனார்
  123. மனைக்கு விளக்கம் மடவார்;  மடவார் தனக்கு தகைசால் புதல்வர்; -  என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது? -  நான்மணிக்கடிகை
  124. நான்மணிக்கடிகை  எந்த நூல்களுள் ஒன்று? -  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  125. கடிகை என்பதன் பொருள் என்ன? -  அணிகலன்
  126.  நான்மணிக்கடிகை என்பதன் பொருள் என்ன? -  நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
  127. நான்மணிக் கடிகையில் ஒவ்வொரு பாடலும் எத்தனை அறக்கருத்துகளை கூறுகின்றன? -  4
  128. விளம்பிநாகனார் இன் இயற்பெயர் என்ன? -  நாகனார்
  129. விளம்பி என்பது எதனைக் குறிக்கும்? -  ஊரைக் குறிக்கும்
  130. வீட்டிற்கு அழகு எது? -  பெண்கள்
  131. பெண்ணுக்கு விளக்கு போன்றவர்கள் யார்? -  பண்பில் சிறந்த அவள் குழந்தைகள்
  132. குழந்தைகளுக்கு  விளக்கு போன்றது இது? -  கல்வி
  133. கல்விக்கு  விளக்கு போன்றது இது? -  கற்றவர்களிடம் உள்ள நல்லெண்ணங்கள்
  134. தாளில் எழுதாத பாடல்கள் எனவெனப்படுகின்றன? - நாட்டுப்புற பாடல்
  135. எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய் வழியாக பரவுகின்ற பாட்டு இது? -  நாட்டுப்புறப்பாட்டு
  136. எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் இவற்றை என்னவென்று கூறுவார்கள்? -  வாய்மொழி இலக்கியம்
  137. நாட்டுப்புற பாடல்கள் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது? -  கிராமிய பாடல்கள்
  138. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடிய  நாட்டுப்புற பாடல்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றது? -  கானா பாடல்
  139. கொழுக்கட்டை கொழுக்கட்டை  ஏன் வேகல - எனும் பாடல் இவ்வகை பாடல்? -  விளையாட்டு பாடல்
  140. நாட்டுப்புற பாடல்கள் எத்தனை வகைப்படும்? -  ஏழு வகை
  141. பிறந்த குழந்தைக்கு  பாடும் பாடல் - தாலாட்டு பாடல்
  142.  வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல் -  விளையாட்டு பாடல்
  143. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடும் பாடல் -   தொழில் பாடல்
  144. திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது எவ்வகை பாடல்? -  சடங்கு பாடல் மற்றும் கொண்டாட்ட பாடல்
  145. சாமி கும்பிட பாடும் பாடல் - வழிபாட்டு பாடல்
  146. இறந்தோர்க்கு படுவது  - ஒப்பாரி பாடல்
  147. கொழும்பில கூடாரம் -  உங்க மாமா கொத்தமல்லி வியாபாரம் -  எனும் பாடல் எவ்வகை பாடல்? - தாலாட்டு பாடல்
  148. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு -  எனும் பாடல் எவ்வகை பாடல்? -  விளையாட்டு பாடல்
  149. ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா - எனும் பாடல்  எவ்வகை பாடல்? - விழிப்புணர்வு பாடல்
  150. வீரச் சிறுவன் எனும் சிறுகதை ஆசிரியர் யார்? - ஜானகிமணாளன்
  151. வீரச்சிறுவன் சிறுகதை இந்தக் கதைத் தொகுப்பில் உள்ளது? -  அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்
  152.  வீரச்சிறுவன் சிறுகதை யாரைப் பற்றி குறிப்பிடுகிறது? -  சுவாமி விவேகானந்தர்
  153. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன? -  நரேந்திரதத்
  154.  ஆனம்  என்பதன் பொருள் என்ன? -  குழம்பு
  155. நாழி  என்பதன் பொருள் என்ன? -  தானியங்களை அளக்கும் படி
  156. அகவிலை என்பதன் பொருள் என்ன? -  தானிய விலை
  157. கூடாரம் இடுவது  என்பதன் பொருள் என்ன? -  தங்குவது
  158. சொலவடைகள் என்பதன் பொருள் என்ன? -  பழமொழிகள்
  159. நாட்டுப்புற பாடல்கள்  பழமொழிகள் விடுகதைகள் இவற்றைப் படித்தால் தமிழில் எதனை உருவாக்கலாம்? -  பெரியதொரு சொற்களஞ்சியத்தை
  160.  பழந்தமிழர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் எவ்வாறு அமைந்திருக்கும்? -  ஏதேனும் ஒரு நல்ல நோக்கத்தில்
  161. பழந்தமிழனின் வழிபாட்டு முறைகளில் ஒன்று -  வீரவணக்கம்
  162. போரில் விழுப்புண் பட்டு நெஞ்சில் வேல் பாய்ந்து இறந்த வீரர்களை தமிழர் எவ்வாறு போற்றினர்? -  தெய்வமாகப் போற்றினர்
  163. இந்தியாவின் அழகு அதன் பன்மைத்தன்மையில் தான் உள்ளது
  164. தான் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவராக இருந்தாலும் ஏனைய குழுக்களையும் மதித்தும்  இசைந்தும் வாழ்வதையே எவ்வாறு அழைக்கின்றோம்? - பன்மைச் சமூகம்
  165. ஒரு வகை என்பது இயற்கையின் நியதி இல்லை;  பலவகை அல்லது பன்மை தான் இயற்கை

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...